கலவரக்காரர்களை குறிவைத்த பொலிஸார்: வீடு வீடாக சென்று நடக்கும் கைது நடவடிக்கை
பிரித்தானியா முழுவதும் கலவரங்கள் வெடித்துள்ள நிலையில், பொலிஸார் வீடு வீடாக சென்று ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்து வருகின்றனர்.
தீயாய் பரவும் போராட்டங்கள்
Southport பகுதியில் ஜூலை 29ம் திகதி Axel Rudakubana என்ற 17 வயது சிறுவன் நடத்திய வன்முறை தாக்குதலுக்கு பிறகு ஒட்டுமொத்த பிரித்தானியாவிலும் கலவரங்கள் வெடித்துள்ளது.
Southport-ல் தொடங்கிய இந்த கலவரங்கள் Liverpool, London என பரவி தற்போது Rotherham மற்றும் Middlesbrough வரை பரவி நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றுள்ளது.
Large group of migrant men armed with sticks beat up alleged anti mass-immigration protesters in Middlesbrough.
— Visegrád 24 (@visegrad24) August 4, 2024
You won’t see these videos in mainstream media…
?? pic.twitter.com/VCU0TF1iht
பிரித்தானியாவில் வெடிக்கும் கலவரம்: பொலிஸார் மீது நாற்காலிகளை தூக்கி எறிந்த குடியேற்ற எதிர்ப்பாளர்கள்!
பொலிஸார் அதிரடி
இந்நிலையில் போராட்டத்தில் வன்முறையை முன்னெடுத்த கலவரக்காரர்களை பிரித்தானிய பொலிஸார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.
அந்த வகையில், Sunderland பகுதியில் வன்முறையில் இறங்கிய குடியேற்ற எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கைது நடவடிக்கையை பிரித்தானிய பொலிஸார் செய்து வருகின்றனர்.
BREAKING:
— Visegrád 24 (@visegrad24) August 3, 2024
The British police are going door-to-door in Sunderland arresting people they suspect of crimes in connection with the anti mass-immigration protests
?? pic.twitter.com/eRlPySXG6k
இது தொடர்பாக வெளியான வீடியோ ஒன்றில், பொலிஸார் குழு ஒன்று கிளர்ச்சியாளர் ஒருவரின் வீட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று அவரை கைது செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |