பிரித்தானியாவில் பொலிஸார் காரில் மணமேடைக்கு சென்ற 2 புது மணப்பெண்கள்: குவியும் வாழ்த்துக்கள்
பிரித்தானியாவில் திருமணத்தை தவறவிட இருந்த இரண்டு மணப்பெண்களுக்கு ஹெட்ஜ் எண்ட் காவல்துறை உதவி இருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
திருமணத்தை தவறவிட இருந்த மணப்பெண்கள்
திருமணம் என்பது ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாளாக போற்றப்படுகிறது, இந்த நாளை ஒவ்வொரு தம்பதிகளும் தங்கள் நினைவை விட்டு நீங்காதவாறு சிறப்பாக அமைத்துக் கொள்ளவே விரும்புகிறார்கள்.
அப்படி இருக்கையில், பிரித்தானியாவில் திருமண நாளன்று இரண்டு மணப்பெண்கள் தங்களது வாகனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விழா நடைபெறும் இடத்திற்கு செல்ல முடியாமல் நடுவழியில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
lovell photography
ஆனால் இந்த இடையூறால் மணப்பெண்கள் இருவருக்கும் அவர்களது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உதவிக்கரம் நீட்டிய காவல்துறை
வாகனம் பழுதுபட்டு மணப்பெண்கள் இருவரும் ஹெட்ஜ் எண்டில் உள்ள செயிண்ட் ஜான்ஸ் சாலையில் செய்வதறியாமல் நின்று கொண்டு இருந்த நிலையில், அவர்களுக்கு ஹெட்ஜ் எண்ட் காவல்துறை(Hedge End Police Department) உதவியுள்ளது.
இது தொடர்பாக ஹெட்ஜ் எண்ட் காவல்துறை அவர்களது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள தகவலில், ஹெட்ஜ் எண்டில் உள்ள செயிண்ட் ஜான்ஸ் சாலையில் திருமண மணப்பெண்களை ஏற்றிக் கொண்டு சென்ற கார் பழுதடைந்ததை அடுத்து நாங்கள் சரியான இடத்தில் சரியான நேரத்தில் இருந்தோம்.
மணப்பெண்கள் இருவரும் தங்களது திருமணத்தை தவறவிட போகிறோம் என்ற கவலையில் இருந்தனர், ஆனால் நாங்கள் அவர்களை பொலிஸ் காரில் ஏற்றிக் கொண்டு சரியான நேரத்தில் திருமணம் நடைபெறும் இடத்தில் ஸ்டைலாக இறக்கி விட்டோம் என தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறோம் என ஹெட்ஜ் எண்ட் காவல்துறை பேஸ்புக்கில் தெரிவித்துள்ளது.
காவல்துறையின் இந்த பதிவு வெளியாகி சில தினங்களே இருக்கும் நிலையில், 1000 லைக்குகளை தாண்டி கவனம் ஈர்த்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |