பிரித்தானியாவில் 3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: பொதுமக்களுக்கு பொலிஸார் வேண்டுகோள்!
பிரித்தானியாவின் லிங்கன்ஷையரில் (Lincolnshire) உள்ள கிரந்தம் தெருவில் மூன்று வயது சிறுமிக்கு அத்துமீறி முத்தமிட்டு சென்ற இரண்டு இளைஞர்களை தீவிரமாக தேடி வருவதாக மெட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லிங்கன்ஷையரின் கிரந்தம் (Grantham) தெருவில், பாரோபி கேட் பகுதியில் தாயுடன் நடந்து சென்ற மூன்று வயது சிறுமிக்கு இரண்டு இளைஞர்கள் அத்துமீறிய முறையில் முத்தமிட்டு சென்றது சங்கடத்தை ஏற்படுத்தி சென்றதை அடுத்து பிரித்தானிய பொலிஸார் அந்த இளைஞர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.
வெள்ளை மற்றும் சாம்பல் நிற ஜாக்கெட் அணிந்த ஒருவர் கீழே குனிந்து சிறுமியின் முகத்தில் முத்தமிட்ட செயலால் மன உளைச்சலுக்கு ஆளான தாய், அந்த இளைஞர்களை எதிர்கொள்ள முயன்றுள்ளார், ஆனால் அவர் அதனை பொருட்படுத்தாமல் சிகப்பு நிற மேலாடை அணிந்திருந்த இரண்டாவது மனிதருடன் டைசார்ட் சாலை வழியாக வெளியேறியுள்ளனர்.
இந்தநிலையில், அத்துமீறலில் ஈடுபட்ட அந்த இளைஞர்களின் சிசிடிவி புகைப்படங்களை வெளியிட்ட லிங்கன்ஷையரில் காவல்துறை, புகைப்படம் மங்கலாக இருப்பதாக தெரிவித்து, இது சம்பந்தப்பட்டவருக்கு மிகவும் வேதனையான விஷயம் எனத் தெரிவித்துள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு: 30 நாடுகளின் தலைவர் கூடி விவாதம்: தொடங்கியது நோட்டோ வருடாந்திர சந்திப்பு
இருப்பினும் இளைஞர்கள் குறித்து அடையாளம் தெரிந்தவர்கள் 22 ஜூன் 289 என்ற எண்ணை மேற்கோள் காட்டி 101 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கவும் அல்லது control@lincs.police.uk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும் எனத் காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.