அகதிகளுக்கு ஆங்கிலப் புலமை அவசியம் இல்லை: பிரித்தானிய அரசியல்வாதிகளுக்கு ஆத்திரத்தையூட்டியுள்ள செய்தி
லேபர் அரசின் கீழ் உள்துறைச் செயலராக பொறுப்பு வகிக்கும் ஷபானா மஹ்மூத், பிரித்தானியாவில் குடியமர்வு உரிமைகளுக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு சில நிபந்தனைகள் விதித்துள்ளார்.
வெளிநாட்டவர்களுக்கு சில நிபந்தனைகள்
ஷபானாவின் நிபந்தனைகளின்படி, பிரித்தானியாவில் குடியமர்வு உரிமைகளுக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு குற்றப் பின்னணி இருக்கக்கூடாது, ஆங்கிலப் புலமை இருக்கவேண்டும், அத்துடன், அவர்களுக்கு கடனும் இருக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Credit : Getty
இந்நிலையில், பிரித்தானிய அரசியல்வாதிகளுக்கு ஆத்திரத்தையூட்டும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
அகதிகளுக்கு ஆங்கிலப் புலமை அவசியம் இல்லை
ஆம், எல்லை பாதுகாப்பு அமைச்சரான அலெக்ஸ் நோரிஸ், ஷபானாவின் இந்த விதிகள் புகலிடக்கோரிக்கையாளர்களுக்குப் பொருந்தாது என்று கூறியுள்ளார்.

Credit : GB News
பிரித்தானியாவில் காலவரையறையின்றி தங்குவதற்கு விண்ணப்பிக்கும் அகதிகள், ஆங்கில மொழித் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று உள்துறை அலுவலக வட்டாரங்கள் வலியுறுத்தியுள்ளன.
ஆனால், அகதிகள் நிலை தொடர்பான ஒப்பந்தம், மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய ஒப்பந்தம் (ECHR) ஆகியவற்றில் கையொப்பமிட்டுள்ள நாடு என்னும் முறையில், பிரித்தானியா, புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ள அனைத்து புகலிடக்கோரிக்கைகளையும் பரிசீலிக்க சட்டப்பூர்வமாகக் கடமைப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் நோரிஸ்.
மேலும் ஒரு நபர் பிரித்தானியாவிலிருந்து அகற்றப்படும் நிலையில், அது எந்த சூழ்நிலையானாலும், அவர்களுடைய மனித உரிமைகளை அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரு நபர் ஆங்கிலம் பேசும் திறன் உடையவரா, இல்லையா என்பதையெல்லாம் பார்க்காமலே இந்த விடயங்களைப் பின்பற்றவேண்டும் என்றும் கூறியுள்ள நோரிஸ், ஒருவர் தங்கள் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படும்போது, அங்கு அவர்களுக்கு துன்புறுத்தல் அல்லது கடுமையான தீங்கு ஏற்படும் என்னும் நிலையில், அவர்களை அவர்களுடைய சொந்த நாட்டுக்கோ அல்லது, வேறு எந்த நாட்டிற்கும் அனுப்பக்கூடாது என்பதையும் இந்த விதிகள் உறுதி செய்கின்றன என்றும் கூறியுள்ளார்.
ஆக, அகதிகளுக்கு ஆங்கிலப் புலமை அவசியம் இல்லை என நோரிஸ் தெரிவித்துள்ள விடயம், ஆளுங்கட்சியினரை கொந்தளிக்கச் செய்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |