மோசமான நபருடன் பெற்றோருக்கு தொடர்பு: தர்மசங்கடமான சூழலில் பிரித்தானிய இளவரசிகள்
மோசமான நபர் ஒருவருடன் தொடர்பிலிருந்ததால் தங்கள் பெற்றோர் சிக்கலை எதிர்கொள்ள நேரிட, எதிர்வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது தாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தர்மசங்கடமான சூழலில் பிரித்தானிய இளவரசிகள் இருவர் சிக்கிக்கொண்டுள்ளார்கள்.
மோசமான நபருடன் பெற்றோருக்கு தொடர்பு
இளவரசர் ஆண்ட்ரூவுக்கும் ஏராளம் சிறுபிள்ளைகளையும் இளம்பெண்களையும் சீரழித்த மோசமான பாலியல் குற்றவாளியான அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து ஆண்ட்ரூவை ராஜ குடும்பத்திலிருந்து விலக்கிவைத்தார் மகாராணியார்.
இந்நிலையில், ஆண்ட்ரூவின் மனைவியான சாரா ஃபெர்குசனுக்கும் அதே ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கும் தொடர்பு இருப்பது அவர் எப்ஸ்டீனுக்கு அனுப்பிய மின்னஞ்சல்கள் மூலம் சமீபத்தில் தெரியவந்துள்ள விடயம் மீண்டும் ராஜ குடும்பத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

புலம்பெயர்வோர் பயணிக்க சிறு படகுகளுக்கு பதில் பெரிய படகுகள்: பின்னணி குறித்து எச்சரிக்கும் குற்றவியல் நிபுணர்
தர்மசங்கடமான சூழலில் பிரித்தானிய இளவரசிகள்
இப்படி ஆண்ட்ரூவும் அவரது முன்னாள் மனைவியான சாராவும் செய்த தவறுகள் அவர்கள் பிள்ளைகளுக்கும் சிக்கலை உருவாக்கியுள்ளன.
ஆம், கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது ராஜ குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் Sandringhamஇல் கூடுவதும், St Mary Magdalene church என்னும் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் ஆராதனைக்குச் செல்வதும் உண்டு.
ஆனால், மீண்டும் மீண்டும் ராஜ குடும்பத்துக்கு அவமானத்தை ஏற்படுத்திவரும் இளவரசர் ஆண்ட்ரூவும் அவரது முன்னாள் மனைவியான சாராவும் இம்முறை Sandringhamக்கு வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த பலர் தெரிவித்துள்ளார்கள்.
எதிர்காலத்தில் எந்த நிகழ்ச்சிகளிலும் தன் தம்பியான ஆண்ட்ரூவோ அவரது முன்னாள் மனைவியான சாராவோ கண்ணிலேயே படக்கூடாது என மன்னர் சார்லஸ் விரும்புவதாகவும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஆக, தங்கள் பெற்றோர் கிறிஸ்துமஸ் விழாவுக்காக Sandringhamக்கு அழைக்கப்படாத நிலையில், தாங்கள் மட்டும் எப்படி அங்கு செல்வது என்னும் தர்மசங்கடமான நிலை, ஆண்ட்ரூ, சாரா தம்பதியரின் பிள்ளைகளான இளவரசிகள் பீட்ரைஸுக்கும் யூஜீனிக்கும் உருவாகியிருப்பதாக தெரிவிக்கிறார் ராஜ குடும்ப நிபுணரான Phil Dampier.
அதுமட்டுமல்ல, தன் தம்பி பிள்ளைகளான இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனி மீது அன்பும் பாசமும் கொண்டவர் மன்னர் சார்லஸ். மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கும், இளவரசர் ஹரிக்கும் அவர்களை மிகவும் பிடிக்கும். ஆக, இளவரசிகள் விடயத்தைப் பொருத்தவரை, மன்னர் சார்லசுக்கும் இது தர்மசங்கடமான நிலைதான் என்கிறார் Dampier.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |