கேட் மிடில்டனின் கடுமையான வீட்டுத் தடை: இளவரசர் ஜார்ஜ், லூயிஸ் மற்றும் இளவரசி சார்லோட் அமைதி
இளவரசர் ஜார்ஜ், லூயிஸ் மற்றும் இளவரசி சார்லோட் ஆகியோருக்கு கடுமையான வீட்டுத் தடை.
குழந்தைகள் கத்தி கூச்சலிடுவது வரம்புக்கு மீறியது என தடை விதிப்பு.
இளவரசர் ஜார்ஜ், லூயிஸ் மற்றும் இளவரசி சார்லோட் ஆகியோருக்கான கடுமையான தடைகளை இளவரசி கேட் மிடில்டன் வீட்டில் விதித்து இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.
வேல்ஸின் புதிய இளவரசராக வில்லியமும் இளவரசியாக கேட் மிடில்டனும் நியமிக்கப்பட்டதில் இருந்து, அவர்களுக்கான அரச கடமைகள் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இளவரசர் ஜார்ஜ், இளவரசி சார்லோட் இளவரசர் லூயிஸ் ஆகியோர்களை கவனித்து, அவர்களுக்கு தேவையான பராமரிப்புகளை பார்த்துக் கொள்ள அரண்மனையில் அரச செவிலித்தாய் இருந்தாலும், தங்களது குழந்தைகளின் மீது பெற்றோர்களின் கவனம் இருக்க வேண்டும் என்பதில் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் தீவிரமாக உள்ளனர்.
SHUTTERSTOCK
இந்நிலையில் இளவரசி கேட் மிடில்டன் வீட்டில் இளவரசர் ஜார்ஜ், லூயிஸ் மற்றும் இளவரசி சார்லோட் ஆகியோருக்கான கடுமையான தடை ஒன்றை கடைப்பிடித்து வருவதாக தகவல் தெரியவந்துள்ளது.
அந்த தடையானது இளவரசர் ஜார்ஜ், லூயிஸ் மற்றும் இளவரசி சார்லோட் ஆகிய மூவரில் யாரும் வீட்டில் கத்தி கூச்சலிட கூடாது என்பதே, மேலும் இந்த தடை தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும் ஆதாரம் தெரிவித்துள்ளது.
சன் செய்தி நிறுவனத்திற்கு ஆதாரம் ஒன்று தெரிவித்துள்ள தகவலின் அடிப்படையில், குழந்தைகள் கத்தி கூச்சலிடுவது வரம்புக்கு மீறியது என்றும், கூச்சலுக்கு காரணமான விஷயங்கள் உடனடியாக அங்கிருந்து நீக்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது.
getty
பொதுவாக குறும்புத்தனம் செய்யும் குழந்தை அந்த இடத்தில் இருந்து உடனடியாக அகற்றப்படும் அல்லது இடையூறு செய்தல் மற்றும் அமைதியாக பேசுவதன் மூலம் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் இருவரும் குழந்தைகள் மத்தியில் சமாதானத்தில் ஈடுபடுவார்கள்.
கூடுதல் செய்திகளுக்கு: விதிகள் இல்லாத போர் அறிவிப்பு: கிரிமியன் பாலம் மீதான தாக்குதலுக்கு ரஷ்ய எம்.பி கண்டனம்
அத்துடன் இளவரசர்களுக்கு அனைத்து விஷயங்கள் விளக்கப்பட்டுள்ளன, மற்றும் விளைவுகளையும் கோடிட்டு இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் தெரிவித்துள்ளனர்.
இதனால் வேல்ஸ் இளவரசரின் வீட்டில் கூச்சல் குழப்பங்கள் பெரும்பாலும் ஏற்படுவது இல்லை என ஆதாரம் தெரிவித்துள்ளது.
PA