விதிகள் இல்லாத போர் அறிவிப்பு: கிரிமியன் பாலம் மீதான தாக்குதலுக்கு ரஷ்ய எம்.பி கண்டனம்
இது விதிகள் இல்லாத போர் அறிவிப்பு என ரஷ்ய எம்.பி Oleg Morozov கண்டனம்.
பாலத்தின் மீதான தாக்குதலில் 3 பேர் வரை உயிரிழப்பு.
ரஷ்யாவை கிரிமியன் தீபகற்பத்துடன் இணைக்கும் பாலத்தின் மீதான தாக்குதலை “விதிமுறைகள் இல்லாத போர் பிரகடனம்" என ரஷ்ய எம்.பி Oleg Morozov கண்டித்துள்ளார்.
உக்ரைன் மீதான போர் நடவடிகையில் ரஷ்ய படைகள் பெரும்பாலான பகுதிகளில் பின்வாங்க தொடங்கி இருக்கும் நிலையில், கிரிமியன் தீபகற்பத்தை ரஷ்யாவுடன் இணைக்கும் The Kerch பாலத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.
கார் வெடிகுண்டு மூலம் சனிக்கிழமை அதிகாலை குறிவைக்கப்பட்ட பாலத்தின் வழியாக தான், உக்ரைன் தாக்குதலில் ஈடுபட்டிருக்கும் ரஷ்ய படையினருக்குத் தேவையான அனைத்து ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் கொண்டு செல்லப்பட்டு வந்தாக தெரியவந்துள்ளது.
Ukraine has just admitted to blowing up the Kerch bridge which connects the Crimea to Russia.
— Lewis Brackpool (@Lewis_Brackpool) October 8, 2022
Zelensky’s advisor Podolyak has said the explosion is just “the beginning”.pic.twitter.com/x8MKZsnwrU
ரஷ்ய பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் அறிக்கைப்படி, பாலத்தின் மீதான உக்ரைனிய தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் வரை கொலை செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் ரஷ்யாவின் ஸ்டேட் டுமாவின் துணை தலைவர் Oleg Morozov, னிக்கிழமையன்று RIA நோவோஸ்டிக்கு அளித்த பேட்டியில், "இது விதிகள் இல்லாத போர் அறிவிப்பு" என்று மேற்கோள் காட்டி, பாலத்தின் மீதான தாக்குதலை கண்டித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட இளம் பெண்ணின் இறந்த உடல்: பொலிஸார் விசாரணை தீவிரம்
அத்துடன் எங்களுக்கு எதிராக ஒரு மறைக்கப்படாத பயங்கரவாதப் போர் நடத்தப்படுகிறது, மேலும் கிரிமியன் பாலத்தின் மீது நீண்டகாலமாக அறிவிக்கப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் இனி ஒரு சவாலாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.