விம்பிள்டன் இறுதிப்போட்டியில் இளவரசி கேட் மிடில்டன்: வைரல் புகைப்படம்
பிரித்தானியாவின் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் விம்பிள்டன் ஆண்கள் இறுதிப் போட்டியை காண வந்துள்ளார்.
பொது நிகழ்வுகளை தவிர்த்த கேட்
கடந்த பிப்ரவரியில் பிரித்தானியாவின் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தனக்கு புற்றுநோய் பாதிப்பு குறித்து பொதுவெளியில் அறிவித்தார்.
மேலும், புற்று நோய்க்கான முன்னெச்சரிக்கை கீமோதெரபியை கேட் மேற்கொண்டு வருகிறார்.
Mom and daughter day at #Wimbledon for the Princess of Wales and Princess Charlotte ? Sister Pippa Middleton is also here with the Princess.
— British Royaltea (@BritishRoyaltea) July 14, 2024
Catherine received a standing ovation from the crowd ?#PrincessCatherine #PrincessofWales
?Karwai Tang pic.twitter.com/Yfc4ZmYySz
இதையடுத்து பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் இருந்தும், அரச சேவைகளில் இருந்தும் சற்று விலகி இருந்து வருகிறார்.
விம்பிள்டனில் கேட்
இந்நிலையில் விம்பிள்டன் ஆண்கள் இறுதிப் போட்டியை காண வேல்ஸ் இளவரசி கேட் பொது வெளியில் தோன்றியுள்ளார்.
தற்போது நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் Carlos Alcaraz மற்றும் Novak Djokovic ஆகியோர் விளையாடுவதை பார்வையிடுவார்.
A wonderful Centre Court welcome for our Patron HRH The Princess of Wales ?#Wimbledon pic.twitter.com/HGcphka27P
— Wimbledon (@Wimbledon) July 14, 2024
மேலும் இந்த நிகழ்வில் அவரது மகள் இளவரசி சார்லோட்(Princess Charlotte) மற்றும் சகோதரி பிப்பா(sister Pippa) ஆகியோர் அவருடன் சென்றுள்ளார்.
அத்துடன் இந்த போட்டியின் வெற்றியாளருக்கு கோப்பை வழங்கும் கௌரவத்தையும் இளவரசி கேட் மிடில்டன் பெற்றுள்ளார்.
The Princess of Wales and Princess Charlotte arriving together at #Wimbledon this afternoon ? pic.twitter.com/3JNBFxI7vJ
— Belle (@RoyallyBelle_) July 14, 2024
இது அவரது புற்றுநோய் கண்டறியப்பட்டதிலிருந்து இரண்டாவது பொது தோற்றம் ஆகும். இதற்கு முன்னதாக கடந்த மாதம் ட்ரூப்பிங் தி கலர் நிகழ்வில் கேட் மிடில்டன் கலந்து கொண்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |