ராணிக்கு அடுத்து கல்லினன் வைர பதக்கம் யாருக்கு? ரகசியமாக வைக்கப்பட்டுள்ள உயில்கள்
ராணி இரண்டாம் எலிசபெத்தின் கல்லினன் வைர பதக்கம் உலகில் மனித உயிர்கள் தோன்றுவதற்கு முன்னால் உருவானது.
ராணி மேரியால் 1953ம் ஆண்டு கல்லினன் வைர பதக்கம் ராணி இரண்டாம் எலிசபெத்திக்கு வழங்கப்பட்டது.
உலகில் உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்பு உருவானதாக சொல்லப்படும் கல்லினன் iii மற்றும் கல்லினன் iv வைர பதக்கம் ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவிற்கு பிறகு யாருக்கும் செல்லும் என்ற கேள்வி பிரித்தானியா முழுவதும் எழுந்துள்ளது.
GETTY
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் முடிசூட்டு விழாவின் போது அவரது பாட்டி மற்றும் முன்னாள் பிரித்தானிய ராணி மேரியால் உலகின் மிகவும் மதிப்புமிக்க கல்லினன் iii மற்றும் கல்லினன் iv வைர பதக்கம் 1953ம் ஆண்டு வழங்கப்பட்டது.
அறிவியலாளர்களின் கணிப்புப்படி இந்த வைரம் பூமிக்கு அடியில் சுமார் 250 முதல் 400 மைல் தொலைவில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு இருக்க வேண்டும் எனவும், இதன் காலம் 1 பில்லியன் வருடங்களுக்கு முந்தியது, குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் டைனோசர்கள்காலத்துக்கு முந்தியது மற்றும் உலகில் உயிர்களின் தோன்றுவதற்கு முந்தியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
GETTY
கல்லினன் iii (Cullinan )மற்றும் கல்லினன் iv ஆகிய இரண்டு வைர துண்டுகளால் ஆன ராணியின் பதக்கம் மொத்தமாக 94.4 மற்றும் 63.6 காரட் எடை கொண்டது ஆகும், இதில் உள்ள வைரத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 50 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணியால் செல்லமாக (‘Granny's Chips’) 'கிரானி'ஸ் சிப்ஸ்' என்று அழைக்கப்படும் இந்த வைர பதக்கம் மிகப்பெரிய வைர துண்டில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டது ஆகும், கல்லினன் என்ற இந்த வகை ரத்தினத்தின் மொத்த எடை 3106 காரட் (621.35 கிராம்) ஆகும்.
1905 ஆண்டு தென்னாப்பிரிக்க சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரம் பல மாத வேலைப்பாடுகளுக்கு பிறகு I முதல் IX வரையிலான துண்டுகளாக வெட்டப்பட்டது.
அவற்றில் கல்லினன் iii மற்றும் கல்லினன் iv ஆகிய வைரங்கள் தென்னாப்பிரிக்க பிரிட்டிஷ் காலனியின் விசுவாசத்தின் அடையாளமாக கிங் எட்வர்ட் vii க்கு பரிசாக வழங்கப்பட்டது.
GETTY
இத்தகைய அற்புதமான வரலாறு கொண்ட வைர பதக்கத்தை ராணி இரண்டாம் எலிசபெத் தனது 70 ஆண்டுகால ஆட்சி முழுவதும் பாதுகாத்து வந்துள்ளார், மேலும் பாரம்பரியமாக மற்றும் சந்ததி சந்ததியாக பரிமாறப்பட்டு வரும் இந்த வைர பதக்கத்தை ராணி இரண்டாம் எலிசபெத் முக்கிய அரச விழாக்களில் அணிந்து வருவது அனைவரும் பார்க்ககூடியது.
இந்நிலையில் ராணி எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து, அவரது தனிப்பட்ட சேர்ப்புகளில் உள்ள இத்தகைய உலகின் மிகவும் மதிப்புமிக்க வைர பதக்கம் முதல் பல ஆபரணங்கள் வரை அரச குடும்பத்தில் அடுத்து யாருக்கு செல்லும் என்ற கேள்வி கேட் மில்டிடன் மற்றும் மேகன் மார்க்கல் தொடங்கி பிரித்தானியா முழுவதும் எழுந்துள்ளது.
GETTY
ஆனால் ராணி இரண்டாம் எலிசபெத் தொடர்பான அரச உயில்கள் இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதால் ராணியின் தனிப்பட்ட சேகரிப்பில் உள்ள ஒவ்வொரு பகுதியையும் யார் சரியாகப் பெறுவார்கள் என்பதைத் தீர்மானிக்க எந்த வழியும் இல்லை.
கூடுதல் செய்திகளுக்கு: நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாயில் நான்காவது கசிவு: ஸ்வீடன் கடலோர காவல்படை அறிவிப்பு
ராணியின் கல்லினன் வைர பதக்கம் முதல் பல ஆபரண நகைகள் வரையிலான சேகரிப்புகள் அரச கிரீடத்தில் இருந்து சேர்ப்புகளில் இருந்து முற்றிலும் தனிப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
GETTY