ரஷ்யாவின் மிரட்டலுக்கு பிரித்தானியா பதிலடி
UK responds after Russia warns of inevitable consequences: ரஷ்யாவுக்கு எதிராக பிரித்தானிய ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தவிர்க்க முடியாத பின்விளைவுகள் ஏற்படும் என ரஷ்யா எச்சரித்ததற்கு பிரித்தானியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.
ரஷ்யா மீது தாக்குதல் நடத்த பிரித்தானிய தயாரிப்புகளான ட்ரோன்களை உக்ரைன் பயன்படுத்துவதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, பிரித்தானியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளது ரஷ்யா.
ரஷ்யா மிரட்டல் லண்டனிலுள்ள ரஷ்ய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி
ஒன்றில், லண்டன் ஒருபக்கம் அமைதி வேண்டும் என கூறிக்கொண்டே மறுபக்கம் வேண்டுமென்றே உக்ரைன் பிரச்சினையை பெரிதுபடுத்த முனைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், லண்டனின் நடவடிக்கைகள் தவிர்க்கமுடியாத பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், ரஷ்யாவுடனான மோதலில் பிரித்தானியாவின் ஈடுபாடு எந்த அளவுக்கு அதிகமாகிறதோ, உக்ரைனுக்கு அது எந்த அளவுக்கு ஆதரவளிக்கிறதோ, அந்த அளவுக்கு பிரித்தானியா விலை கொடுக்கவேண்டியிருக்கும் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது.
பிரித்தானியாவின் பதில்
இந்நிலையில், ரஷ்யாவின் மிரட்டலைத் தொடர்ந்து செய்தி ஒன்றை வெளியிட்ட பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சக செய்தித்தொடர்பாளர், பிரித்தானியா உக்ரைனுடன் தோளோடு தோளாக நிற்கிறது என்றும், ரஷ்யாவின் சட்டவிரோத ஊடுருவலுக்கு எதிராக உக்ரைன் தன்னைக் காத்துக்கொள்வதற்குத் தேவையான தளவாடங்களை உக்ரைனுக்குக் கொடுக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
அத்துடன், உக்ரைனிலும், பிரித்தானியா மற்றும் எங்கள் கூட்டாளிகளுக்கு எதிராகவும், ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நிற்பதில் இந்த அரசாங்கத்தின் உறுதியைப் பற்றி ரஷ்யாவுக்கு எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது என்றும் கூறியுள்ளது பிரித்தானிய தரப்பு.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |