பிரித்தானிய பிரதமர் போட்டிக்கான வேட்பாளர்கள் யார் யார்? வரலாறு மற்றும் முழு விவரம்
பிரித்தானிய பிரதமர் பதவியில் இருந்து லிஸ் டிரஸ் விலகல்.
பிரதமர் பதவிக்கான புதிய போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
பிரித்தானிய பிரதமர் பதவியில் இருந்து லிஸ் டிரஸ் விலகியதை தொடர்ந்து, அடுத்த பிரதமருக்கான போட்டியில் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் போரிஸ் ஜான்சன் ஆகியோர் வரிசையில் நிற்பதாக தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவின் பிரதமர் மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் ஆகிய பதவியில் இருந்து விலகுவதாக லிஸ் டிரஸ் அக்டோபர் 20 திகதி வியாழக்கிழமை அறிவித்தார், இதன்மூலம் பிரித்தானியாவின் மிக குறுகிய காலம் ஆட்சியில் இருந்த தலைவர் ஆனார்.
Liz Truss has resigned as prime minister just 44 days after taking over from Boris Johnson.
— Sky News (@SkyNews) October 20, 2022
She will be the shortest-serving prime minister in British history and a new leader is set to be elected next Friday.
Watch her resignation speech in full ?https://t.co/tWl95IerT0 pic.twitter.com/4FtcU2ArhI
அவரது பொருளாதார திட்டங்களால் ஏற்பட்ட சந்தை சரிவு காரணமாக அவருக்கு எதிராக சொந்த கட்சியை சேர்ந்த சில எம்.பிகளே போர்க்கொடி தூக்கிய நிலையில் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக லிஸ் டிரஸ் (Liz Truss) அறிவித்தார்.
மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில், பிரித்தானியாவின் அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை நான் பிரதமராக இருப்பேன் என்றும் லிஸ் டிரஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் இருப்பவர்கள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
ரிஷி சுனக்:
இந்திய வம்சாவளி அரசியல்வாதியான ரிஷி சுனக்(42) இந்த போட்டியில் முன்னணியில் உள்ளார். இவர் கடந்த முறை பிரதமர் பதவிக்காக லிஸ் டிரஸுடன் போட்டியிட்ட போது 20,297 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார்.
ஆனால் செவ்வாயன்று, பிரிட்டிஷ் இன்டர்நேஷனல் இன்டர்நெட் அடிப்படையிலான சந்தை ஆராய்ச்சி மற்றும் தரவு பகுப்பாய்வு நிறுவனம் நடத்திய யூகோவ் கருத்துக் கணிப்பு, ரிஷி சுனக் (Rishi Sunak) லிஸ் டிரஸ்ஸுக்கு மாற்றக்காக கூறப்படும் சிறந்த மதிப்பீடுகளை கொண்டுள்ளார் என்பதை வெளிப்படுத்தியது.
கெமி படேனோச்:
கடந்த 2017-ல் பிரித்தானிய பாராளுமன்றத்தில் இணைந்த முன்னாள் வங்கியாளர் கெமி படேனோச் (Kemi Badenoch) போரிஸ் ஜான்சனின் அரசாங்கத்தில் இளநிலை அமைச்சர் பதவிகளில் இருந்துள்ளார்.
கடந்த முறை நடந்த பிரித்தானிய பிரதமர் போட்டியில் 59 வாக்குகள் பெற்று கடைசி வேட்பாளராக வெளியேறினார். 2017-இல் சசெக்ஸில் உள்ள குஃப்ரான் வால்டனின் எம்.பி.யாக படேனோக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
போரிஸ் ஜான்சன்:
கொரோனா காலத்தில் டவுனிங் தெருவில் நடைபெற்ற விருந்துகள் தொடர்பாக தொடர்ச்சியாக எழுந்த குற்றச்சாட்டுகள் காரணமாக மூன்று மாதங்களுக்கு முன்பு பிரித்தானியாவின் பிரதமர் பதவியில் இருந்து வெளியேறினார்.
சமீபத்தில் YouGov கருத்துக் கணிப்புகளின் படி லிஸ் டிரஸை விட போரிஸ் ஜான்சன்(Boris Johnson) பிரபலமானவர் என தெரியவந்துள்ளது.
மேலும் முன்னாள் பிரதமர் கன்சர்வேடிவ் எம்.பி.க்களில் ஒரு பிரிவினரிடம் பிரபலமாக உள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், பிரதமர் பதவிக்கு மீண்டும் வருவதற்கு முயற்சி செய்வார் என்று ஊகங்கள் பரவி வருகின்றன.
பென்னி மோர்டான்ட்:
போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை அடுத்து கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கு பென்னி மோர்டான்ட் (Penny Mordaunt) முன்னோடியாக நியமிக்கப்பட்டார்.
முன்னாள் பாதுகாப்பு மற்றும் வர்த்தக மந்திரி பென்னி மோர்டான்ட் வலுவான பிரெக்ஸிட் ஆதரவாளராகவும், 2016 லீவ் பிரச்சாரத்தில் முக்கிய நபராகவும் இருந்தார்.
2018 முதல் 2019 வரை பெண்கள் மற்றும் சமத்துவங்களுக்கான அமைச்சராகவும் பென்னி மோர்டான்ட் முக்கியப் பங்காற்றினார்.
ஜெர்மி ஹன்ட் :
2012 இல் சுகாதாரத் துறைக்கான செயலாளராக ஜெர்மி ஹன்ட் (Jeremy Hunt) நியமிக்கப்பட்டார், அதைத் தொடர்ந்து ஜெர்மி 8 ஜனவரி 2018 முதல் 9 ஜூலை 2018 வரை சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புக்கான மாநிலச் செயலாளராகப் பணியாற்றினார்.
கடந்த இரண்டு முறை நடைபெற்ற தலைமைப் போட்டிகளிலும் ஜெர்மி ஹன்ட் வேட்பாளராக இருந்துள்ளார், 2019ல் நடைபெற்ற போட்டியில் ஜான்சனிடம் இறுதி ரன்-ஆஃப் இல் தோல்வியடைந்தார்.
ஆனால் 14 அக்டோபர் 2022 அன்று பிரித்தானியாவின் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார்.