புலம்பெயர்தல் தொடர்பில் பிரித்தானியா அறிமுகம் செய்யும் மற்றொரு விதி: சர்வதேச மாணவர்கள் மீது குறிவைப்பு
சர்வதேச மாணவர்களைக் குறிவைத்து மற்றொரு புலம்பெயர்தல் விதியை அறிமுகம் செய்ய உள்ளது பிரித்தானியா.
ஆங்கிலப்புலமை இல்லாவிட்டால்...
பிரித்தானியாவில் வேலை செய்ய விரும்பும் புலம்பெயர்ந்தோர், ஆங்கிலப்புலமை இல்லாவிட்டால் வேலை செய்யமுடியாத வகையில் சட்டம் ஒன்று, நேற்று, அதாவது, அக்டோபர் மாதம் 14ஆம் திகதி, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இனி பிரித்தானியாவில் வேலை செய்ய விரும்பும் புலம்பெயர்ந்தோர், Secure English Language Test (SELT) என்னும் தேர்வை எழுதி வெற்றி பெறவேண்டியிருக்கும்.
பிரித்தானியா அறிமுகம் செய்யும் மற்றொரு விதி
மேலும், 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம், சர்வதேச மாணவர்களைக் குறிவைத்து மற்றொரு புலம்பெயர்தல் விதியை அறிமுகம் செய்ய உள்ளது பிரித்தானியா.
அதன்படி, பிரித்தானியாவுக்குக் கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்கள், தங்கள் படிப்புக்கு ஏற்ற ஒரு வேலையைத் தேடிக்கொள்ள தற்போது இரண்டு ஆண்டுகள் அவகாசம் கொடுக்கப்படுகிறது. அது, 2027 ஜனவரி முதல், 18 மாதங்களாக குறைக்கப்பட உள்ளது.
அதுமட்டுமின்றி, 2025 - 2026 கல்வி ஆண்டுக்கான மாணவர்களுக்கான நிதி கட்டுப்பாடுகளிலும் மாற்றம் செய்யப்பட உள்ளது.
அதாவது, சர்வதேச மாணவர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தங்கள் வங்கிக்கணக்கில் இவ்வளவு பணம் வைத்திருக்கவேண்டும் என்ற விதி உள்ளது. அந்த தொகையும் உயர்த்தப்பட உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |