பிரித்தானியாவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட மருத்துவர்களில் ஒரு பிரிவினர் முடிவு
பிரித்தானியாவில் மருத்துவர்களில் ஒரு பிரிவினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார்கள்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட பயிற்சி மருத்துவர்கள் முடிவு
இங்கிலாந்தில், Resident doctors என அழைக்கப்படும் பயிற்சி மருத்துவர்கள் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார்கள்.

ஜனவரி மாதம் முதலே, மருத்துவர்கள் தரப்பு, சுகாதாரச் செயலரான வெஸ் ஸ்ட்ரீடிங்குடன் ஊதியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவரும் நிலையில், அவர் முன்வைத்த ஆஃபரை ஏற்றுகொள்ள மறுத்த மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார்கள்.
ஆனால், அப்படி மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்களானால், அதனால் 300 மில்லியன் பவுண்டுகள் அளவுக்கு இழப்பு ஏற்படக்கூடும் என மருத்துவத்துறை தலைவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
அத்துடன் நோயாளிகள் வாங்கியுள்ள அப்பாயிண்ட்மெட்கள் ரத்தாகும், மருத்துவப்பரிசோதனைகளுக்காகவும், சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்காகவும் நோயாளிகள் நீண்ட நாட்கள் காத்திருக்க நேரிடும் என்றும் மருத்துவத்துறை தலைவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |