ஏர் இந்தியா விமான விபத்து அறிக்கையை ஆய்வு செய்யும் பிரித்தானிய புலனாய்வு பிரிவு
ஏர் இந்தியா விமான விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக பிரித்தானிய விமான விபத்து புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
அஹமதாபாத் விமான நிலையத்தில் ஜூன் 12-ஆம் திகதி நடந்த ஏர் இந்தியா 171 விமான விபத்தில் உயிரிழந்த 242 பயணிகளில், 52 பேர் பிரிட்டிஷ் நாட்டவர்களாக இருப்பதால், பிரித்தானிய விமான விபத்துத் துறை (UK AAIB) இந்த விபத்து குறித்த விசாரணையை கவனமாக கண்காணித்துவருகிறது.
இந்த விபத்து தொடர்பாக இந்திய விமான விபத்து விசாரணை அமைப்பு (AAIB India) வெளியிட்ட தற்காலிக அறிக்கையை பிரித்தானிய விமான அதிகாரிகள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.
"எங்கள் குடும்பங்களை புறக்கணிக்கக் கூடாது" - பிரித்தானியாவின் இருந்து வலியுறுத்தல்
விபத்தில் உயிரிழந்த பயணிகளின் குடும்பங்கள், விசாரணை செயல்முறையில் தங்களைச் சேர்ந்த வல்லுநர்களுக்கும் இடம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
இந்த வழக்கில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் Keystone Law, வெளியான அறிக்கையை வரவேற்றுள்ளது.
விசாரணையின் முக்கிய தகவல்
அறிக்கையில், எஞ்சின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச்கள் Run-இல் இருந்து ஒரே நொடிக்குள் CutOff-க்கு மாற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக திடீரென விசை இழப்புக்கு காரணமாகி விமானம் கீச்செ விழுந்தது.
காக்பிட் ஒலிக்காட்சி படி, விமானிகள் இருவரும் ‘Fuel Cutoff’ (எரிபொருள் துண்டிப்பு) தொடர்பாக விமானத்தில் உரையாடியுள்ளனர்.
“ஏன் எரிபொருளை நீ கட் செய்தாய்?” என்று விமானி ஒருவர் கேட்டதும், துணை விமானி “நான் அப்படி செய்யவில்லை” என மறுத்துள்ளார்.
விசாரணை இன்னும் தொடருகிறது, இறுதி அறிக்கைக்கு பல மாதங்கள் ஆகலாம் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |