இளம் இந்திய திறமைகளை பரிமாற்றும் புதிய திட்டம்: பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் சம்மதம்
இளம் தொழில்முறை இளைஞர்களை பரிமாற்றி கொள்ளும் புதிய திட்டத்திற்கு இந்தியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசிய நகரம் பாலி-யில் நடைபெற்று வரும் G-20 நாடுகளின் மாநாட்டில் இருநாட்டு தலைவர்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
தொழில்முறை இளைஞர்கள் பரிமாற்று திட்டம்
இளம் தொழில்முறை இளைஞர்களை பரிமாற்றி கொள்ளும் புதிய திட்டத்திற்கு பாலி-யில் நடைபெற்று வரும் G-20 மாநாட்டில் வைத்து புதன்கிழமை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் 18 முதல் 30 வயதுடைய இந்திய இளைஞர்கள் 3000 நபர்களுக்கு பிரித்தானியாவில் பணி புரிய இரண்டு ஆண்டுகள் வரை அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
United by friendship
— Rishi Sunak (@RishiSunak) November 16, 2022
एक मज़बूत दोस्ती
???? @NarendraModi pic.twitter.com/uJXRriCVwg
இந்த பரஸ்பர திட்டத்தின் கீழ் பிரித்தானிய இளைஞர்களும் இந்தியாவில் தங்கி பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள். கடந்த ஆண்டு கையெழுத்தான பிரித்தானியா-இந்தியா இடையிலான இடம்பெயர்வு மற்றும் இயக்க கூட்டாண்மை திட்டத்தின் ஒற்றைப் பகுதி இதுவாகும்.
மேலும் இது 2023 முதல் அதிகாரப்பூர்வமாக செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்களுக்கு வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி
இந்த திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட பிறகு, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்த கருத்தில், இந்தியாவுடன் நாம் கொண்டுள்ள ஆழமான கலாச்சார மற்றும் வரலாற்று உறவுகளின் நம்பமுடியாத மதிப்பை நான் நேரடியாக அறிவேன்.
Was great to meet PM @RishiSunak in Bali. India attaches great importance to robust ?? ?? ties. We discussed ways to increase commercial linkages, raise the scope of security cooperation in context of India’s defence reforms and make people-to-people ties even stronger. pic.twitter.com/gcCt35m1uw
— Narendra Modi (@narendramodi) November 16, 2022
இந்தியாவின் திறமையான இளைஞர்களில் இன்னும் அதிகமானவர்களுக்கு பிரித்தானியாவில் பணி புரிவதற்கு இந்த திட்டத்தின் கீழ் வாய்ப்பு கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என பிரதமர் ரிஷி சுனக் குறிப்பிட்டுள்ளார்.
ரிஷி சுனக் பிரித்தானியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி பிரதமர் ஆவார்.
First Meet, First Greet between our PM @narendramodi ji and UK PM @RishiSunak !
— Vinod Tawde (@TawdeVinod) November 16, 2022
UK has sanctioned a big visa scheme for Indians with 3000+ young professionals being granted British visas to work in the UK each year.
Indeed a sign of progressive India-UK ties ?? ?? pic.twitter.com/IMyKij2c0o