பிரித்தானியாவில் விற்பனைக்கு வந்த 700 ஆண்டு பழமையான கோட்டை., மதிப்பு ரூ.800 கோடி!
பிரித்தானியாவில், 700 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சிறப்பு கோட்டை முதல்முறையாக விற்பனைக்கு வந்துள்ளது.
Ripley Castle என அழைக்கப்படும் இந்த கோட்டை North Yorkshire அருகிலுள்ள Harrogate பகுதியில் அமைந்துள்ளது.
இதன் விலை 21 மில்லியன் பவுண்டுகள் (இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட ரூ.800 கோடி) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த கோட்டை லண்டனுக்கு வெளியே, பிரித்தானியாவில் விற்பனைக்கு வரும் மிக விலையுயர்ந்த சொத்தாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
Ripley Castle – சிறப்பு அம்சங்கள்
இந்த கோட்டை 445 ஏக்கர் நிலப்பரப்பில் பரவியுள்ளது. இதில், ஒரு பெரிய குளம், பப், ஹெலிபேடு, கார் பார்க்கிங், விவாக நிகழ்ச்சிகளுக்கான மண்டபம், கிரிக்கெட் மைதானம், ஹோட்டல், தேநீர் அறை மற்றும் பரிசுப் பொருள் கடை உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
Ripley Castle 700 ஆண்டுகளுக்கான வரலாறு
14-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோட்டையை சர் தாமஸ் இங்கில்பி (Sir Thomas Ingilby) என்பவர் 50 ஆண்டுகளாக பராமரித்து வந்தார்.
1308-1309 காலகட்டத்தில், சர் தாமஸ் இங்கில்பியின் முன்னோர், எட்லின் த்வெஞ்சே (Edeline Thwenge) என்பவரை திருமணம் செய்து, இந்த கோட்டையை தகப்பனாரின் பரிசாகப் பெற்றார்.
மேலும், அவரின் மகன், கிங் எட்வர்ட் III-ஐ ஒரு காட்டு பன்றி தாக்கியபோது உயிரைக் காப்பாற்றியதற்காக, அவருக்கு சர்பத்ரி (knighthood) பட்டம் வழங்கப்பட்டது.
கோட்டை விற்பனைக்கான காரணம்
சர் தாமஸ் மற்றும் அவரது மனைவி லேடி இங்கில்பி (Lady Ingilby) ஓய்வெடுக்க விரும்புகிறார்கள்.
தாங்கள் பல ஆண்டுகள் பராமரித்து வந்த இந்த கோட்டையை விற்பனை செய்யும் நிலையில், ஒருபுறம் மகிழ்ச்சியாகவும், மறுபுறம் வேதனையாகவும் உணர்வதாக சர் தாமஸ் கூறினார்.
"நாங்கள் இது வரை செய்த அனைத்தையும் வெற்றிகரமாக முடித்து விட்டோம். வருங்கால தலைமுறைகளுக்காக கோட்டையின் பாரம்பரியத்தைக் காப்பாற்றி விட்டோம்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விற்பனை முடிந்ததும், தம்பதியினர் உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
"இந்த தோட்டங்களில் நடைபயிற்சி செய்யும்போது, குளத்திற்கருகே மான்கள் தண்ணீர் குடிக்க வருவது, மலர்களின் மணம் காற்றில் வீசுவது – எல்லாமே ஒரு கதைப்போல் உணர்த்துகிறது," என்று லேடி இங்கில்பி கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK Ripley Castle, Ripley Castle fir sale, 700 Years old UK Castle Goes For Sale For First Time