3 நபர்களின் DNA கொண்டு பிறந்த 8 குழந்தைகள்! பிரித்தானியாவில் நடந்த மருத்துவ சாதனை
பிரித்தானியாவில், மரபணு நோய்களால் பாதிக்கப்படும் பிறப்புகளை தடுக்கும் நோக்கில், மூன்று நபர்களின் DNA அடங்கிய புதிய IVF தொழில்நுட்பம் மூலம் 8 குழந்தைகள் பிறந்துள்ளன.
இது உலகத்தில் முதன்முறையாக நடந்த மிக முக்கியமான மருத்துவ முன்னேற்றமாக கருதப்படுகிறது.
இந்த முறை, பெண்ணின் கருமுட்டை, ஆணின் விந்து, மற்றும் மற்றொரு பெணின் சுகாதாரமான மைட்டோகாண்ட்ரியல் DNA மூலமாக குழந்தையை உருவாக்குகிறது.
இதனால், இந்தக் குழந்தைகள் “மூன்று பெற்றோர் குழந்தைகள்” என அழைக்கப்படுகிறார்கள். ஆனால் இந்த DNA-யில், தானம் செய்த நபரின் பங்கு வெறும் 0.1% மட்டுமே.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட இந்த முறை பிரித்தானியாவில் 2015-ல் அங்கீகரிக்கப்பட்டது. இப்போது வெளியான மருத்துவ ஆய்வில், 22 பெண்களில் எட்டு குழந்தைகள் சுகபிரசவமாகப் பிறந்துள்ளன. இவர்களில் நான்கு ஆண், நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர்.
முழு மரபணுவில், பாதிக்கப்பட்ட மைட்டோகாண்ட்ரியல் DNA 95-100% வரை குறைக்கப்பட்டுள்ளதோடு, மற்ற சிலருக்கு 77-88% வரை குறைவடைந்துள்ளது — இது நோயைத் தூண்டும் அளவுக்கு கீழ் உள்ளது.
இந்த மருத்துவ சாதனையை பல நாடுகள் இன்னும் அங்கீகரிக்கவில்லை. அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் இது தொடர்பான நெறிமுறைக் கவலைகள் காரணமாக தடையாக உள்ளன.
ஆனாலும், இந்த முறை மரபணு நோயால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு ஒரு வாழ்க்கை மாற்றும் நம்பிக்கை வழங்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Three parent babies UK, Mitochondrial disease IVF treatment, Newcastle Fertility Centre trial, DNA from 3 people IVF, UK mitochondrial donation, Designer babies ethics debate, IVF with donor mitochondrial DNA, Genetic disease prevention babies, NEJM 3-parent baby study