இஸ்ரேல் மீது தாக்குதல்: ஈரானுக்கு எதிராக பிரித்தானியா கடுமையான நடவடிக்கை
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் ஈரான் ராணுவத் தலைவர்கள் மற்றும் அமைப்புகள் மீது பிரித்தானியா கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.
இஸ்ரேல் மீது அக்டோபர் 1, 2024 அன்று ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலளிக்க, பிரித்தானியா ஈரானின் முக்கிய ராணுவத் தலைவர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக தடை நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
பிரித்தானிய வெளியுறவு அமைச்சகம் இன்று (திங்கட்கிழமை) இதனை வெளியிட்டது.
இந்த தடைகள், ஈரான் ராணுவத்தின் உயர் அதிகாரிகள், வான்படை தலைவர்கள் மற்றும் பாலிஸ்டிக் மற்றும் கிரூஸ் ஏவுகணை வளர்ச்சியில் ஈடுபட்ட அமைப்புகளை குறிவைத்து அமுல்படுத்தப்பட்டுள்ளன.
பிரித்தானிய வெளியுறவு அமைச்சரான டேவிட் லாமி, "ஈரானும் அதன் ஆதரவாளர்களும் எச்சரிக்கைகளைக் கடந்து நடத்திய ஆபத்தான தாக்குதல்கள், மத்திய கிழக்கில் நிலையை மேலும் மோசமாக்குகின்றன. இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலாக, ஈரானுக்கு பொறுப்பு விதிக்கின்றோம் மற்றும் இதனை முன்னெடுத்தவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறோம்," என்று கூறியுள்ளார்.
லக்ஸ்சம்பர்கில் நடந்த ஆரோப்பிய ஒன்றிய வெளிநாட்டு விவகாரக் கூட்டத்தில் பேசிய லாமி, ஈரானின் நடவடிக்கைகள் குறித்து ஐரோப்பிய நாடுகளுடனும் ஆலோசனை நடத்தியதாக பிரித்தானியா தெரிவித்தது.
இத்தடையில் இரானிய ராணுவத் தளபதி அப்தொல் ரஹிம் மொசாவி, Farzanegan Propulsion Systems Design Bureau மற்றும் இரானிய விண்வெளி அமைப்பு அடங்குகின்றன.
மேலும், G7 நாடுகள் (அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்டவை) இந்த தாக்குதலை கண்டித்து, மத்திய கிழக்கில் தீவிரம் குறைக்க அழைப்பு விடுத்துள்ளன. இஸ்ரேலின் பாதுகாப்புக்கு தொடர்ந்து தங்களின் ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK Sanctions Iran, UK Iran, Israel Iran war