ரஷ்யாவின் கிரிப்டோ நெட்வொர்கை குறிவைத்துள்ள பிரித்தானியா - புதிய பொருளாதாரத் தடைகள் விதிப்பு
ரஷ்யாவின் கிரிப்டோ நெட்வொர்கை குறிவைத்து பிரித்தானியா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையை எதிர்த்து, மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள தடைகளை மீற ரஷ்யா பல வழிகளில் முயற்சிக்கிறது.
இதனைத் தடுக்க, பிரித்தானியா தற்போது ரஷ்யாவுடன் தொடர்புடைய சில நிதி நிறுவனங்கள் மற்றும் கிர்கிஸ்தானில் இயங்கும் கிரிப்டோ நிறுவனங்களை இலக்காகக் கொண்டு புதிய தடைகளை அறிவித்துள்ளது.
கிர்கிஸ்தானில் உருவாக்கப்பட்டுள்ள A7A5 என்ற ரஷ்ய ரூபிளுடன் இணைக்கப்பட்ட ஸ்டேபிள்காயின் (Stablecoin), 4 மாதங்களில் 9.3 பில்லியன் டொலர் மதிப்பிலான பரிவர்த்தனைகளை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஸ்டேபிள்காயின் பின்னணியில் உள்ள Grinex LLC, Old Vector LLC உள்ளிட்ட நிறுவனங்கள் மற்றும் Luxemberg நிறுவனமொன்றும் பிரித்தானியாவின் புதிய தடைகளுக்கு உள்ளாகியுள்ளது. அமெரிக்காவும் கடந்த வாரம் இந்த நிறுவனங்களை தடை செய்தது.
மேலும், இந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உதவிய 3 நபர்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், உக்ரைன் போருக்கு எதிராக ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் அழுத்தங்கள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK Russia crypto sanctions, Kyrgyz stablecoin A7A5, Grinex Old Vector sanctions, UK targets Russian financial networks, UK sanctions August 2025, Russia sanctions evasion crypto, Kyrgyz crypto firms UK ban, A7A5 ruble stablecoin