உக்ரைன் அவலங்களை விளக்கும் புதிய செயற்கைகோள் புகைப்படம்: அத்துமீறிய ரஷ்ய ராணுவம்!
ரஷ்யா உக்ரைன் மீது நடத்திவரும் போர் தாக்குதலில் இதுவரை அந்தநாட்டின் முக்கிய நகரங்களின் குடியிருப்பு பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கும் புதிய செயற்கைகோள் புகைபடம் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய போர் நான்கு வாரங்களை கடந்து 24வது நாளாக இன்றும் தொடரும் நிலையில், ரஷ்ய ராணுவம் அத்துமீறி குடியிருப்பு பகுதியில் ஏவுகணை தாக்குதல் நடத்தி மிகப்பெரிய போர் குற்றம் புரிந்துள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டி வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவின் தனியார் நிறுவனமான Maxar டெக்னாலஜிஸ் வெளியிட்ட புதிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் உக்ரைனின் குடியிருப்பு பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை வெளிகொண்டுவந்துள்ளது.
அந்தவகையில், இந்த புகைப்படம் உக்ரைனின் முக்கிய நகரங்களான மரியுபோல், கீவ், மற்றும் செர்னிஹிவ் ஆகிய நகரங்களின் குடியிருப்பு பகுதிகளில் ரஷ்யா ராணுவம் நடத்திய தொடர் தாக்குதலால் பாதிப்பிற்கு உள்ளான கட்டிடங்கள் மற்றும் எரிந்த வாகனங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளன.
இதனிடையே உக்ரைன் அரசு வெளியிட்ட பாதிப்பு அறிக்கையில், இதுவரை 2500 பொதுமக்கள் ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலால் கொலை செய்யபட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.