விமானங்கள் தாமதம்... பாடசாலைகள் மூடல்: கடும் நெருக்கடியை எதிர்கொள்ளும் பிரித்தானியர்கள்
பிரித்தானியா முழுவதும் பனிப்பொழிவு, பெருவெள்ளம் மற்றும் கடும் குளிர் எச்சரிக்கையை அடுத்து பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், பயண நெருக்கடியையும் பிரித்தானியர்கள் எதிர்கொண்டுள்ளனர்.
பெரும் இடையூறு
வாரயிறுதியில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக முக்கிய விமான நிலையங்களில் இருந்து வரும் விமானங்கள் உட்பட பெரும் இடையூறு ஏற்பட்டது, அதே நேரத்தில் சாலைகளில் வாகனங்கள் சிக்கி சாரதிகளை தவிப்புக்கு உள்ளாக்கின.
அத்துடன் நூற்றுக்கணக்கான வெள்ள அபாயம் மற்றும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. மட்டுமின்றி இரவோடு இரவாக வெப்பநிலை -13C என சரிவடைந்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் இன்று பகல் தங்களது சமூக ஊடக பக்கத்தில் பதிவு செய்துள்ள தகவலில், இதுவரை பிரித்தானியாவின் குளிர்காலத்தில் மிகவும் குளிரான இரவு இதுவென குறிப்பிட்டுள்ளது.
ஸ்கொட்லாந்தின் லோச் கிளாஸ்கார்னோச்சில் வெப்பநிலை மைனஸ் 13.3 டிகிரி செல்சியஸாக சரிவடைந்தது. பனிப்பொழிவு மற்றும் கனமழையும் இணைந்து, சில பகுதிகளில் வாரத்தின் தொடக்கத்தில் புதிய சிக்கலை ஏற்படுத்தலாம் என்றே அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில், சுற்றுச்சூழல் முகமை 166 வெள்ள எச்சரிக்கைகளையும் வெளியிட்டுள்ளது, அதாவது வெள்ளம் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் 299 அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது, அதாவது வெள்ளம் கண்டிப்பாக ஏற்படும் என்றே எச்சரித்துள்ளனர்.
தேசிய பிரதானசாலைகள்
பனி, வெள்ளம் அல்லது விபத்துக்கள் காரணமாக பிரித்தானியா முழுவதும் ஏ-சாலைகளின் பல பகுதிகள் மூடப்பட்டுள்ளதாக தேசிய பிரதானசாலைகள் நிர்வாகம் தெரிவித்துள்ளன.
மோசமான வானிலையால் ஏற்பட்ட இடையூறு திங்கள்கிழமையும் தொடரும் என்று லீட்ஸ் பிராட்போர்ட் விமான நிலையம் நேற்று இரவு பயணிகளை எச்சரித்தது. மேலும், மான்செஸ்டர் விமான நிலையம் அதன் இரண்டு ஓடுபாதைகளையும் மீண்டும் திறந்துள்ளது,
ஆனால் சில புறப்பாடுகள் மற்றும் வருகைகள் இன்னும் தாமதங்களை சந்திக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளது. மேலும் வெள்ளம் காரணமாக பீட்டர்பரோ மற்றும் லெய்செஸ்டர் இடையே உள்ள அனைத்து பாதைகளையும் முடக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |