இங்கிலாந்தில் மாணவிகளுக்கு புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் பள்ளிகள் கொடுத்துள்ள எச்சரிக்கை
இங்கிலாந்திலுள்ள நகரமொன்றில், புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் பள்ளிகள் மாணவிகளுக்கு எச்சரிக்கை ஒன்றைக் கொடுத்துள்ளதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மாணவிகளுக்கு எச்சரிக்கை
இங்கிலாந்தின் எசெக்ஸிலுள்ள Eppingஇல் அமைந்திருக்கும் பள்ளிகள்தான், தங்கள் மாணவிகளுக்கு புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் எச்சரிக்கை கொடுத்துள்ளதாக நிழல் நீதித்துறைச் செயலரான ராபர்ட் ஜென்ரிக் (Robert Jenrick) தெரிவித்துள்ளார்.
அதாவது, பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும்போதும், பள்ளியிலிருந்து திரும்பும்போதும், புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கியிருக்கும் இடங்களை தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.
மாணவி ஒருத்தி, தான் பள்ளிக்குச் செல்லும் வழியில் புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள ஹொட்டல்கள் முன் கூட்டமாக நிற்கும் புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்களையே பார்த்துக்கொண்டு நிற்பதாகவும், தான் பாதுகாப்பின்றி உணர்வதாகவும் தெரிவித்துள்ளாள்.
ஆக, பெற்றோர் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதும் நடக்கிறது.
இவற்றிற்கெல்லாம் காரணம் என்னவென்றால், பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர், இங்கிலாந்துக்கு வந்து நான்கு நாட்களே ஆன நிலையில், Eppingஇலுள்ள பள்ளி மாணவி ஒருத்தியிடம் அத்துமீறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து அங்கு ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. இந்நிலையில்தான், மாணவியர் பள்ளிக்குச் செல்லும்போதும், பள்ளியிலிருந்து திரும்பும்போதும், புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கியிருக்கும் இடங்களை தவிர்க்குமாறு பள்ளிகள் அவர்களை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |