ஸ்பானிஷ் தீவில் Scuba Diving.,பிரித்தானியருக்கு நேர்ந்த பரிதாபம்
ஸ்பெயினின் சுற்றுலா தீவு கடற்கரையில் Scuba Diving செய்த பிரித்தானியர் உயிரிழந்தார்.
Puerto del Carmen
பிரித்தானியாவைச் சேர்ந்த 59 வயதான நபர் ஒருவர், ஸ்பெயினின் சுற்றுலா தீவுப் பகுதியான Puerto del Carmen-க்கு சென்றுள்ளார்.
அங்கு அவர் Scuba Diving-யில் ஈடுபட்டபோது, எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கியுள்ளார்.
இதனையடுத்து தெற்கு கடற்கரையான Playa Chica-வில் மதியம் 12.30க்கு பிறகு அலாரம் எழுப்பப்பட்டது. மயக்க நிலையில் மீட்கப்பட்ட குறித்த நபருக்கு, அவசரகால மருத்துவ உதவியாளர்கள் முதலுதவி செய்தனர்.
அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்களால் அவரை காப்பாற்ற முடியவில்லை.
பரிதாப உயிரிழப்பு
இதுகுறித்து, பிராந்திய அரசால் நடத்தப்படும் Emergency response coordination centre-யின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "தியாஸ் நகராட்சியில் உள்ள Playa Chicaவில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து, 59 வயதான ஸ்கூபா டைவர் உயிரிழந்தார். நேற்று மதியம் 12.30 மணிக்குப் பிறகுதான் எங்களுக்கு அழைப்புகள் வர ஆரம்பித்தன.
மயக்கமற்ற நிலையில் இருந்த ஒரு ஸ்கூபா டைவருக்கு, அவசர மருத்துவ உதவிக்கு தேவைப்படுகிறது என்றனர். அவசர உதவியாளர்கள் நேர்மறையான முடிவுகளைப் பெறாமல் அவருக்கு CPR பயிற்சி செய்தனர்.
அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. சம்பவம் குறித்து Civil காவலர் அறிக்கை தயாரித்து வருகிறது. உள்ளூர் பொலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்களும் குவிக்கப்பட்டனர்" என தெரிவித்தார்.
63 வயதான பிரித்தானிய பெண்ணொருவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் Tenerife கடற்கரையில் ஸ்கூபா டைவ் செய்தபோது உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |