25 ஆண்டுகளில் நீரில் மூழ்கும் அபாயத்தில் பிரித்தானிய நகரங்கள்., முழு பட்டியல் வெளியீடு
பிரித்தானியாவின் பல கடலோர நகரங்கள் 2050-ஆம் ஆண்டுக்குள் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாக புதிய ஆய்வு எச்சரிக்கிறது.
காலநிலை மாற்றத்தின் விளைவுகளால், பிரித்தானியாவின் புகழ்பெற்ற கடலோர பகுதிகள் மிகவும் பாதிக்கப்படும் நிலையில் உள்ளன.
இதற்கு முக்கிய காரணமாக புவி வெப்பமடைதல் மற்றும் கடல்மட்ட உயர்வு குறிப்பிடப்படுகிறது.
நீர்மூழ்கும் அபாயத்தில் உள்ள பகுதிகள்
Climate Central என்ற ஆய்வுக்குழுவின் கணிப்புகளின்படி, பிரித்தானியாவின் பல பிரதேசங்கள் கடல்மட்ட உயர்வால் 2050-ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நீரில் மூழ்கக்கூடும். குறிப்பாக லின்கன்ஷைர் மற்றும் நார்ஃபோக் கடலோரங்கள் முழுமையாக நீரில் மூழ்கக்கூடும்.
1- மோர்காம்பே (லங்காஷைர்)
2- நியூபோர்ட் (தென் வேல்ஸ்)
3- வெஸ்டன்-சூப்பர்-மேர் (சமர்செட்)
4- சவுதாம்ப்டன் (ஹாம்ப்ஷைர்)
5- போர்ட்ஸ்மவுத் (ஹாம்ப்ஷைர்)
6- கிரேட் யார்மவுத் (நார்ஃபோக்)
7- இஸ்ட்போர்ன் (கிழக்கு சசெக்ஸ்)
8- ஹிதே (கெண்ட்)
9- டோவர் (கெண்ட்)
10- ஷீர்னெஸ் (ஐல் ஆஃப் ஷெப்பி)
11- ஹல் (யார்க்ஷைர்)
அதிக பாதிப்பு ஏற்படும் பகுதிகள்
நீர் பெருக்கம் எங்கு மிக அதிகமாக இருக்கும் என கணக்கிடும்போது, லண்டனின் தேம்ஸ் நதிக்கரைகள் கடல்மட்ட உயர்வால் Surbiton, Canary Wharf, Greenwich, Westminster போன்ற பகுதிகள் நீரில் மூழ்கக்கூடும்.
காலநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக உலோகவாயுக்கள் வெளியேற்றம், குறிப்பாக போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் உள்ளன. இவை கட்டுப்படுத்தப்படாவிட்டால், நீர்மூழ்கும் அபாயம் மேலும் மோசமடையும்.
இதனால், காலநிலை மாற்றத்தைத் தடுக்க உலக அளவில் உடனடி நடவடிக்கைகள் அவசியமாகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK seaside towns predicted to be underwater in 25 years, UK future, UK towns to drown by 2050