மத்திய கிழக்கு நாடுகளுக்கு கூடுதல் விமான பாதுகாப்பு உபகரணங்கள், படைகள்- பிரித்தானியா அறிவிப்பு
ஈரான் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறும் நிலையில், பிரித்தானியா தனது கூட்டாளிகளுக்கு உதவுவதற்காக மத்திய கிழக்கில் கூடுதல் விமான பாதுகாப்பு உபகரணங்களையும் படைகளையும் அனுப்ப உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜான் ஹீலி அறிவித்துள்ளார்.
அவர் சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு சென்று, ஹார்முஸ் நீரிணை மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பை விவாதித்தார்.
இந்நிலையில், பிரித்தானியா, Sky Sabre எனப்படும் தரை அடிப்படையிலான விமான பாதுகாப்பு அமைப்பை சவுதி அரேபியாவில் நிறுவ உள்ளது.
கத்தாரில் பிரித்தானியா-கத்தார் இணைந்த படைப்பிரிவில் செயல்படும் Typhoon fighter jet-களின் பணியையும் நீட்டிக்க உள்ளது. பஹ்ரைனில், Lightweight Multirole Launcher அமைப்பு அந்நாட்டின் பாதுகாப்பு அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

இதற்காக சுமார் 1,000 பிரித்தானிய படையினர் மத்திய கிழக்கில் பணியமர்த்தப்பட உள்ளனர். அவர்கள் புதிய பாதுகாப்பு அமைப்புகளை நிறுவவும், பயிற்சி அளிக்கவும், இயக்கவும் உதவுவார்கள்.
“வளைகுடா நாடுகள் தங்கள் நாட்டை பாதுகாக்கும் வீரத்திற்குப் பாராட்டுகள். பிரித்தானியா தனது நீண்டகால கூட்டாளிகளுடன் நிற்கும். இந்த மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்கிறோம்” என்று ஹீலி தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |