பிரித்தானியாவில் அதிகரிக்கும் உணவு பொருட்களின் விலை; கடந்த ஆண்டை விட 10.6% உயர்வு!
பிரித்தானியாவில் உணவு பொருட்களின் விலை 10.6% உயர்வு.
கோடை வெப்பத்தின் காரணமாக பழங்களின் விலையில் வீழ்ச்சி.
பிரித்தானியாவின் விற்பனையாளர்கள் தங்களுடைய உணவு பொருட்களுக்கு கடந்த ஆண்டை விட 10.6% கூடுதலான விலை கொடுத்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவில் அதிகரித்து வரும் பணவீக்கம், வாழ்க்கை செலவு நெருக்கடி, மற்றும் உக்ரைன் ரஷ்யா போர் ஆகியவற்றால் நுகர்வோர்கள் அதிகப்படியான நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர்.
SKY NEWS
இந்நிலையில் பிரித்தானிய விற்பனையாளர்கள் தங்களுடைய உணவு பொருட்களுக்கு கடந்த ஆண்டை விட கூடுதலாக 10.6% விலை கொடுப்பதாக புள்ளிவிவரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
ஒட்டுமொத்தமாக கடை வியாபார விலை பணவீக்கமானது கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 5.1 சதவிகிதம் உயர்ந்து காணப்பட்ட நிலையில், இந்த செப்டம்பர் மாதம் மட்டும் கூடுதலாக 5.7% வரை உயர்ந்துள்ளது.
உக்ரைன் போரினால் கடந்த மாதங்களில் 9.3%-மாக இருந்த உணவுப் பொருட்களின் விலையேற்ற பணவீக்கமானது தற்போது 10.6% என்ற நிலையை அடைந்துள்ளது.
SKY NEWS
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையினால் உலக அளவில் விலங்குகளுடைய உணவு, தாவர எண்ணெய் மற்றும் உரங்கள் ஆகியவற்றின் விலையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, அதிலும் குறிப்பாக நல்லெண்ணெய் (margarine) ஆகிய பொருட்களை அதிகமாக பாதித்துள்ளது.
புள்ளி விவரப்படி புதிய உணவுப் பொருட்களின் விலை(Fresh food products) கடந்த ஆண்டை விட 12.1% உயர்ந்துள்ளது.
இதற்கிடையில் பிரித்தானியாவில் கோடையில் அதிகரித்த வெப்பத்தின் காரணமாக பழங்கள், ஸ்ட்ராபெர்ரிகள், ப்ளுபெர்ரிகள் மற்றும் தக்காளி ஆகியவற்றின் விலைகள் மட்டும் கணிசமாக குறைந்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: 14 வயது பள்ளி சிறுவனின் இதயத்தை துளைத்த துப்பாக்கி குண்டு: அமெரிக்க பள்ளியில் மீண்டும் தாக்குதல்
இது குறித்து பிரிட்டிஷ் ரீடெய்ல் கன்சோர்டியத்தின் தலைமை நிர்வாகி ஹெலன் டிக்கின்சன், பலவீனமான பவுண்டு, உயரும் எரிசக்தி கட்டணங்கள் மற்றும் உலகளாவிய பொருட்களின் விலைகள், அதிக போக்குவரத்து செலவுகள், இறுக்கமான தொழிலாளர் சந்தை மற்றும் அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட செலவினங்களின் ஒட்டுமொத்த சுமை ஆகியவற்றால் சில்லறை விற்பனையாளர்கள் பெரும் செலவு அழுத்தங்களை எதிர்கொள்கின்றனர் என தெரிவித்துள்ளார்.