பிரித்தானியாவில் திருமண நிதியை திருடிய இந்திய வம்சாவளியை சேர்ந்த தாய்-மகன்: விதிக்கப்பட்ட தண்டனை
பிரித்தானியாவில் திருமணத்திற்காக சீக்கிய சமூகத்தினர் சேகரித்த பணத்தை திருடிய இந்திய வம்சாவளியை சேர்ந்த தாய் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திருட்டில் இறங்கிய தாய், மகன்
இந்திய வம்சாவளியின் சீக்கிய சமூகத்தை சேர்ந்த தாய் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும், தென்கிழக்கு பிரித்தானியாவில் திருமண செலவிற்காக சொந்த சீக்கிய சமூகத்தினர் சேகரித்த பெரும் பணத்தையே திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இதையடுத்து ஹாம்ப்ஷயரில் சவுத்தாம்ப்டன் பகுதியில் உள்ள வீட்டில் கைது செய்யப்பட்ட தாய் கல்வந்த் கவுர்(Kalwant Kaur, 41) மற்றும் அவரது மகன் ஜங் சிங் லங்கன்பால்(Jung Singh Lankanpal, 22) இருவரும் தங்கள் மீது சுமத்தப்பட்ட திருட்டு குற்றச்சாட்டை அக்டோபரில் ஒத்துக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை சவுத்தாம்ப்டன் கிரவுன் நீதிமன்றத்தில் தோன்றிய இருவருக்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது.
நீதிமன்றத்தின் உத்தரவு படி, தாய் கல்வந்த் கவுருக்கு 15 மாதங்கள் சிறைத்தண்டனையும், மகன் ஜங் சிங் லங்கன்பாலுக்கு 30 மாதச் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 15ம் திகதி சவுத்தாம்ப்டனில்(Southampton) க்ளோவ்லி சாலையில் (Clovelly Road) உள்ள முகவரியில் இருந்த வீட்டில் இருந்து GBP 8,000 மதிப்பிலான தொகையை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |