இந்தியாவில் புதிய வளாகத்தை தொடங்கும் பிரித்தானியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகம்
பிரித்தானியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஒன்று இந்தியாவில் அதன் புதிய வளாகத்தைத் அமைக்கவுள்ளது.
இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் பல்கலைக்கழகம் டெல்லி-என்சிஆரில் (Delhi-NCR) தங்கள் மாணவர்களுக்கு கல்வி வழங்க பல்கலைக்கழக வளாகத்தைத் தொடங்கவுள்ளது.
இதன்மூலம் சவுதாம்ப்டன் பல்கலைக்கழகம் இந்தியாவில் வளாகத்தை அமைக்க இருக்கும் மூன்றாவது வெளிநாட்டு பல்கலைக்கழகமாக மாறும்.
இந்திய பல்கலைக்கழக மானியம் ஆணையம் (UGC), தேசிய கல்விக் கொள்கை 2020 (NEP 2020) கீழ், சவுதாம்ப்டன் பல்கலைக்கழகத்திற்கு "Letter of Intent" (LoI) வழங்கியுள்ளது.
இது இந்தியாவிலுள்ள வெளிநாட்டு பல்கலைக்கழக வளாகங்களின் நிறுவலுக்கான UGC வழிகாட்டுதல்களுக்குப் பிறகு வழங்கப்பட்ட முதல் "Letter of Intent" ஆகும்.
இதற்கு முன், அவுஸ்திரேலியாவின் டீக்கின் பல்கலைக்கழகம் (Deakin University) இந்தியாவில் தனது வளாகத்தைத் தொடங்கியது.
அதையடுத்து, அவுஸ்திரேலியாவின் வோலோன்காங் பல்கலைக்கழகம் (University of Wollongong) குஜராத்தின் GIFT Cityயில் தங்கள் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த தங்கள் வளாகத்தைத் தொடங்கியுள்ளது.
சவுதாம்ப்டன் பல்கலைக்கழகம் 2025-ஆம் ஆண்டு ஜூலையில் இந்தியாவில் தங்கள் வளாகத்தை தொடங்கவுள்ளது.
இந்தியாவில் இத்தகைய பல்கலைக்கழகங்களை உருவாக்க முயற்சிக்கும் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், இந்தியா வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை வரவேற்கும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், இந்தியாவை ஒரு உலகளாவிய கல்வி மையமாக மாற்ற வேண்டும் என்பதே இந்திய அரசின் நோக்கம் என்று அவர் கூறினார்.
இத்துடன், மலேசியாவின் லிங்கன் பல்கலைக்கழகம் (Lincoln University College) மற்றும் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் (Oxford University) ஆகியவை இந்தியாவில் தங்கள் வளாகங்களை அமைக்க ஆர்வம் காட்டியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கான வழிகாட்டுதல்களையும் UGC அறிவித்துள்ளது. இத்தகைய பல்கலைக்கழகங்கள் உலகளாவிய தரவரிசையில் 500 அல்லது அதற்கு மேலுள்ளவற்றில் இருக்க வேண்டும் என்பதற்கான தகுதி விதிகளையும் அறிவித்துள்ளது.
இந்தியாவில் உலகளாவிய கல்வி மையத்தை உருவாக்கும் முயற்சியில் இந்த நடவடிக்கை முக்கியமானதாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
University of Southampton, England, Southampton University, Southampton University campus in India Delhi