புதிய வகை வைரஸ்கள்: பிரித்தானியாவின் கூற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை- மறுப்பு தெரிவித்த தென்னாப்பிரிக்கா!
பிரித்தானியாவில் பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸை விட தென்னாப்பிரிக்க வகை வைரஸ் அதிக ஆபத்தானது அல்ல எனறு தென்னாப்பிரிக்காவின் சுகாதார அமைச்சகம் நிராகரித்துள்ளது.
"பிரித்தானிய சுகாதார செயலாளர் கூறியது போல, பிரித்தானிய வகையை விட தென்னாப்பிரிக்க வகையான 501. V2 வைரஸ் அதிகம் பரவக்கூடியது என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை" என தென்னாப்பிரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகெங்கிலும் வரிசைப்படுத்தப்பட்டுள்ள எந்த வகை வைரஸையும் விட 501. V2 வைரஸ் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை தென்னாப்பிரிக்காஉடனான போக்குவரத்து தடையை பிரித்தானிய அரசு அறிவித்தது.
அப்போது பேசிய பிரித்தனைய சுகாதார செயலாளர் மாட் ஹான்காக், பிரித்தானியாவில் உள்ள புதிய வகை வைரஸை விட "அது மிகவும் ஆபத்தானது, ஏனெனில் அது அதிகம் பரவக்கூடியதாகவும், கூடுதலாக பிறழ்ந்த வகையாகவும் தெரிகிறது" எங்க கூறினார்.
அவர் அப்படி கூறியது, "தென்னாபிரிக்காவில் உள்ள மாறுபாடு இங்கிலாந்தின் இரண்டாவது அலைக்கு ஒரு முக்கிய காரணியாக உள்ளது என்ற கருத்தை உருவாக்கியுள்ளது, அது முற்றிலும் தவறானது" என தென்னாப்பிரிக்காவின் சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், "தென்னாப்பிரிக்கா மற்றும் பிரித்தானியா இடையிலான போக்குவரத்து தடை என்பது ஒரு துரதிர்ஷ்டவசமான முடிவு" என்றும் கூறியுள்ளது.