போர் எதிரொலி... பிரித்தானியாவில் சமையல் எண்ணெய் வாங்க மக்களுக்கு கட்டுப்பாடு!
உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்பின் எதிரொலியால் பிரித்தானியாவில் சமையல் எண்ணெய் வாங்க சூப்பர்மார்க்கெட்டுகள் கட்டுப்பாடு விதித்துள்ளன.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பால் விநியோக சங்கிலி பிரச்சனைகள் காரணமாக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tesco சூப்பர்மார்கெட்டில் ஒரு வாடிக்கையாளர் 3 வாங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது, அதேசமயம், Waitrose மற்றும் Morrisons-ல் ஒரு வாடிக்கையாளருக்கு 2 என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவுக்கான பெரும்பாலான சூரியகாந்தி எண்ணெய் உக்ரைனில் இருந்து வருகிறது.
உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதற்கு ஜேர்மன் மக்கள் எதிர்ப்பு
சில சூப்பர்மார்க்கெட்டில் உக்ரைன் சூரியகாந்தி எண்ணெய், ஆலிவ் மற்றும் ராப்சீட் எண்ணெய்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் எண்ணெய் கிடைப்பதை உறுதிசெய்ய தற்காலிகமாக இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரிட்டிஷ் சில்லறை வணிகக் கூட்டமைப்பைச் சேர்ந்த டாம் ஹொல்டர் தெரிவித்துள்ளார்.
வடிக்கையாளர்கள் மீதான தாக்கத்தை குறைக்க, மாற்று சமையல் எண்ணெய்களின் உற்பத்தியை அதிகரிக்க விநியோகஸ்தர்களுடன் சில்லறை விற்பனையாளர்கள் பணியாற்றி வருவதாக டாம் கூறினார்.