உக்ரைனுக்கு சேலஞ்சர் 2 பிரிட்டிஷ் டாங்கிகள்: முதல் நாடாக பிரித்தானியா தீவிர ஆலோசனை
ரஷ்ய படைகளை எதிர்த்து போராட உக்ரைனுக்கு சேலஞ்சர் 2 டாங்கிகளை வழங்க பிரித்தானியா பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா தலைமையில் கூட்டம்
ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் நடவடிக்கைகள் 10 மாதங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், போரின் ஆரம்ப நாட்களில் ரஷ்ய படைகள் கைப்பற்றிய பகுதிகளை உக்ரைனிய ஆயுதப் படையினர் மீட்டு எடுக்க தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் போரில் உக்ரைனுக்கு இராணுவ ஆதரவை வழங்கும் பிரித்தானியா உட்பட சுமார் 50 நாடுகளின் அமெரிக்க தலைமையிலான குழு அதன் அடுத்த கூட்டத்தை ஜனவரி 20 அன்று நடத்த உள்ளது.
Reuters
இந்த கூட்டத்தில் உக்ரைனுக்கு டாங்கிகள் போன்ற புதிய ராணுவ உதவிகள் வழங்குவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரித்தானியா தீவிர ஆலோசனை
இதற்கிடையில் ரஷ்யாவின் படையெடுப்பு படைகளை எதிர்த்து போராடுவதற்கு முதன்முறையாக உக்ரைனுக்கு 10 பிரிட்டிஷ் டாங்கிகள் வழங்குவது குறித்து பிரித்தானியா பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும் சில வாரங்களாகவே உக்ரைனிய ஆயுதப் படைகளுக்கு பிரிட்டிஷ் ராணுவத்தின் சேலஞ்சர் 2 முக்கிய போர் தொட்டியை வழங்குவது குறித்து விவாதங்கள் பிரித்தானியாவில் நடைபெற்று வருகின்றன என்று உரையாடல்களை அறிந்த மேற்கத்திய வட்டாரம் தெரிவித்துள்ளது.
AFP
பிரித்தானியாவின் இந்த முடிவு செயல்படுத்தப்பட்டால் பிற நோட்டோ நாடுகளையும் குறிப்பாக ஜெர்மனி போன்ற நாடுகளையும் உக்ரைனுக்கான குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் பின்பற்றத் தூண்டும் என உக்ரைனிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ரிஷி சுனக்கின் அரசாங்கத்தால் இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை, ஆனால் UK அத்தகைய விநியோகத்தில் கையெழுத்திட்டால், உக்ரைனிய தலைவர்களின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் முதல் நாடு இதுவாகும்.