பிரித்தானியாவில் அதிக முறை புகைப்படம் எடுக்கப்பட்ட புகழ்பெற்ற மரம் வெட்டி சாய்ப்பு: 16 வயது சிறுவன் கைது
பிரித்தானியாவில் அதிக முறை புகைப்படம் எடுக்கப்பட்ட மரம் என்ற புகழை கொண்ட மரம் வெட்டப்பட்டதை அடுத்து சந்தேகத்தின் பேரில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெட்டப்பட்ட புகழ்மிக்க மரம்
பிரித்தானியாவில் ஹட்ரியனின் சுவருக்கு அடுத்துள்ள சைகாமோர் கேப்பில் (Sycamore Gap) இருந்த நாட்டின் புகழ்பெற்ற மற்றும் அதிக முறை மக்களால் புகைப்படம் எடுக்கப்பட்ட மரம் வெட்டப்பட்டுள்ள சம்பவம் அங்குள்ள சமூகத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புகழ்பெற்ற மரம் 1991ம் ஆண்டு கெவின் காஸ்ட்னரின், ராபின் ஹூட்: பிரின்ஸ் ஆஃப் தீவ்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்றது.
Skynews
ரோட்டர்டாம் பல்கலைக்கழக மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்: 2 பேர் பலி, பொலிஸார் அதிரடி
இதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் இந்த மரம் இடம்பெற்றதுடன், சுற்றுலா பயணிகள், பொதுமக்களால் இந்த மரம் அதிக முறை புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இத்தகைய புகழ்பெற்ற மரம் வெட்டப்பட்டதை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் 16 வயது சிறுவன் பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Sky news
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான விசாரணை ஆரம்ப கட்டங்களில் மட்டுமே இருப்பதால், திறந்த மனத்துடன் விசாரணை நடத்தி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |