ட்ரம்ப் ஸ்டைலில் இந்திய உணவகங்களைக் குறிவைக்கும் பிரித்தானியா: 609 பேர் கைது
ட்ரம்ப் ஸ்டைலில் புலம்பெயர்ந்தோர் மீது கடுமையான நடவடிக்கைகளைத் துவங்கியுள்ள பிரித்தானியா அரசு, இந்திய உணவகங்களைக் குறிவைப்பதாக பல்வேறு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
பிரித்தானிய உள்துறைச் செயலரான Yvette Cooperஇன் நேரடி கண்காணிப்பின்கீழ், உள்துறை அலுவலகம் இதுவரை இல்லாத அளவில் ஜனவரியில் மட்டும் 828 இந்திய உணவகங்கள் முதலான இடங்களில் ரெய்டுகள் நடத்தப்பட்டுள்ளன.
அதைத் தொடர்ந்து, 609 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இது முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 73 சதவிகிதம் அதிகமாகும்.
புலம்பெயர்தலை தீவிரமாகக் கட்டுப்படுத்தும் பிரித்தானியா
The public must have confidence in the UK's immigration system.
— Home Office (@ukhomeoffice) February 10, 2025
Through our Plan for Change, we have removed almost 19,000 people including failed asylum seekers, foreign criminals and immigration offenders from the UK since July 2024. pic.twitter.com/QY4tpQDqSP
பிரித்தானியா, சட்டவிரோத புலம்பெயர்ந்தோரைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
பிரித்தானியா உட்பட உலக நாடுகள் பலவற்றில், இன்று புலம்பெயர்தல் தேர்தலில் வெற்றி பெறுபவரைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாகியுள்ளது.
அவ்வகையில், பிரித்தானியாவில் ஆளும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் அரசு, சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
அந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகத்தான் இந்த ரெய்டுகள் நடத்தப்பட்டுள்ளன.
இன்னொரு பக்கம், இந்த சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு ஒரு புலம்பெயர்ந்தோருக்கு 60,000 பவுண்டுகள் வீதம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல், 1,090 அத்தகைய நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |