பிரித்தானியாவில் ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன்: பள்ளியை பூட்டிய பொலிஸார்
பிரித்தானியா பள்ளியில் ஆசிரியர் ஒருவரை மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய பள்ளியில் ஆசிரியருக்கு கத்திக்குத்து
பிரித்தானியாவின் குளோசெஸ்டர்ஷைர்(Gloucestershire) பகுதியில் உள்ள டெவ்க்ஸ்பரி பள்ளியில் (Tewkesbury School) மாணவர் ஒருவர் ஆசிரியரை கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக குளோசெஸ்டர்ஷைர் பொலிஸார் வழங்கிய தகவலில், திங்கட்கிழமை காலை 9:10 மணியளவில் ஆஷ்சர்ச் சாலையில் அமைந்துள்ள பள்ளியில் இருந்து மாணவர் ஒருவரால் ஆசிரியர் கத்தியால் குத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்து காவல்துறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
Urban Pictures
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்ததாகவும், பள்ளியை உடனடியாக மூடும் படியும் அறிவுறுத்தியதாக பொலிஸார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் அறிவுறுத்தலின் படி பள்ளி நிர்வாகமும் உடனடியாக பள்ளியை மூடிய நிலையில், அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது.
வன்முறையில் ஈடுபட்ட மாணவர் கைது
இந்நிலையில் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் டீன் ஏஜ் மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதே சமயம் பாதிக்கப்பட்ட ஆண் ஆசிரியர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
An adult has been taken to hospital with a suspected stab wound following an incident at Tewkesbury School. We were called around 9.10am today (Monday) with a report a pupil had stabbed a teacher. A teenage boy has been arrested in connection with the incident. https://t.co/qe2pln7c8n
— Gloucestershire Constabulary (@Glos_Police) July 10, 2023
இதற்கிடையில் பள்ளியின் முன் பெற்றோர்கள் யாரும் கூட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருப்பதுடன், அவை காவல்துறையின் விசாரணையில் இடையூறு ஏற்படுத்தலாம் அல்லது மாணவர்களின் பாதுகாப்பில் சமரசத்தை ஏற்படுத்தலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கல்வித்துறை செயலாளர் கில்லியன் கீகன் பேசிய போது, பள்ளியில் நடைபெற்ற வன்முறை குறித்து கேள்விப்பட்டு கவலையடைந்துள்ளேன்.
இந்த சம்பவம் தொடர்பாக விவரங்கள் வெளிவரும் போது தன்னுடைய துறை பள்ளிக்கு ஆதரவாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
sky News
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |