லண்டனில் பாடசாலை மீது கார் மோதிய கோர விபத்து... மரணமடைந்த இரண்டாவது குழந்தை
லண்டனில் பாடசாலை ஒன்றின் மீது கார் மோதிய சம்பவத்தில் ஏற்கனவே 8 வயது சிறுமி ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், படுகாயத்துடன் தப்பிய மற்றொரு 8 வயது சிறுமி தற்போது மரணமடைந்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
லண்டனில் விம்பிள்டன் பகுதி
கடந்த வியாழக்கிழமையன்று லண்டனில் விம்பிள்டன் பகுதியில் பாடசாலை ஒன்றின்மீது கார் ஒன்று வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் சிக்கி 8 வயதான Selena Lau என்ற சிறுமி மரணமடைந்தார்.
@LNP
தொடர்புடைய விபத்தில், மற்றொரு எட்டு வயது சிறுமியும், 40 வயது பெண் ஒருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அத்துடன், ஏழு மாதக் குழந்தை உட்பட 16 பேர் இந்த சம்பவத்தில் காயமடைந்த நிலையில், அவர்களில் 10 பேர் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டனர்.
இந்த நிலையில், படுகாயத்துடன் மீட்கப்பட்ட அந்த 8 வயது பாடசாலை மாணவியும் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லண்டன் பெருநகர பொலிசார் வெளியிட்ட தகவலில், குறித்த மாணவியின் பெயர் நூரியா சஜ்ஜத் என குறிப்பிட்டுள்ளனர்.
Image: Eliza Brandreth
எங்கள் அன்புக்குரிய நூரியா
சிறுமி நூரியா மரணம் தொடர்பில் அவரது குடும்பத்தினர் வெளியிட்ட தகவலில், எங்கள் அன்புக்குரிய நூரியாவின் மறைவை நாங்கள் ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம், நூரியா எங்கள் வாழ்வின் வெளிச்சம்.
மகிழ்ச்சி, இரக்கம் மற்றும் தாராள மனப்பான்மை ஆகியவற்றை அவள் கொண்டிருந்தாள், சுற்றியுள்ள அனைவராலும் அவள் விரும்பப்பட்டாள் என குறிப்பிட்டுள்ளனர்.
Family handout
இந்த விபத்தில் காயம்பட்ட 40 வயது கடந்த பெண்மணி தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார். விபத்திற்கு காரணமான 46 வயது பெண்மணி சம்பவயிடத்தில் இருந்தே கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |