பிரித்தானியாவில் அதிகரித்துள்ள கட்டுப்பாடற்ற அதன் பயன்பாடு: அதிரவைக்கும் ஆய்வறிக்கை
அளவுக்கு அதிகமானப் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆண்களுடன் பணிபுரியும் சிகிச்சையாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கடந்த ஆண்டில் கட்டுப்பாடற்ற ஆபாசப் படங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதைக் கவனித்ததாக தெரிவித்துள்ளனர்.
மீட்க வலியுறுத்தும் ஆண்கள்
பிரித்தானியாவின் BACP அமைப்பு முன்னெடுத்த ஒரு ஆய்வில், பிரித்தானியாவில் பணியாற்றும் சிகிச்சையாளர்களில் மொத்தம் 53 சதவீதம் பேர்கள், ஆபாசப் படங்கள் குறித்து ஒரு தேசிய உத்தி தேவை என்று அவசரமாக வலியுறுத்துகின்றனர்.

மேலும், சிக்கலான அந்த நிலையில் இருந்து தங்களை மீட்க வலியுறுத்தும் ஆண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக சிகிச்சையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
BACP அமைப்பு, அங்கீகாரம் பெற்ற சுமார் 3,000 சிகிச்சையாளர்கள் மற்றும் ஆலோசகர்களிடம் நடத்திய ஒரு ஆய்வில், ஆபாசப் படங்களுக்கு அடிமையாகிவிட்டதாகக் கூறும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில் பலர், அதன் விளைவாக தங்கள் பொறுப்புகளைப் புறக்கணித்து வருவதாகவும் அல்லது தங்கள் உறவுகளைச் சேதப்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மொத்தமாக பாதிக்கும்
சிலர் உடல் ரீதியான சிக்கலுடனும் சிகிச்சையாளர்களை அணுகியுள்ளனர். இந்த விவகாரத்தில் பிரித்தானிய அரசாங்கம் அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என Dr Paula Hall கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், வயது சரிபார்ப்பு, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை, குழந்தைப் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்கள் தொடர்பான அரசாங்கத்தின் பணிகளின் போது ஆபாசப் படப் பயன்பாடு குறித்த விடயம் விவாதிக்கப்பட்டதாக ஹால் கூறியுள்ளார்.

ஆனால், இந்தப் பிரச்சினையைக் கையாள்வதற்கு ஒரு விரிவான உத்தி தேவை என்றும் அவர் கூறியுள்ளார். இதன் அளவுக்கு அதிகமான பயன்பாடு அவர்களின் கல்வி, வேலை அல்லது துணையுடனான நெருக்கத்தையும் மொத்தமாக பாதிக்கும் என்றும் மருத்துவர் ஹால் எச்சரித்துள்ளார்.
சில பயனர்கள் மணிக்கணக்கில் ஆபாசப் படங்களைப் பார்ப்பதாலும், அதன் விளைவாக தங்களின் அன்றாடப் பணிகளை முடிக்க முடியாமல் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |