உக்ரைன் போர்... ஓராண்டில் கொல்லப்பட்ட ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கை
கடந்த ஓராண்டில் ரஷ்ய வீரர்கள் சுமார் 420,000 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயங்களுடன் தப்பியுள்ளனர் என உக்ரைன் தரப்பில் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
0.8 சதவீதம் நிலத்தை
2025ல் மட்டும் ரஷ்ய துருப்புகள் உக்ரைனில் 2,564 சதுர மைல்கள் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதுடன், 334 உக்ரேனிய கிராமங்களையும் கைப்பற்றியுள்ளது.

உக்ரைனின் மொத்த நிலப்பரப்பில் 0.8 சதவீதம் நிலத்தை ரஷ்யாவிடம் இழந்துள்ளதாக உக்ரைன் இராணுவத் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி கூறியுள்ளார்.
ஆனால் 420,000 வீரர்களை ரஷ்யா பறிகொடுத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் போரில் ரஷ்யாவின் மொத்த உயிரிழப்புகள் 1.2 மில்லியனுக்கும் அதிகமாகவும்,
கிட்டத்தட்ட 11,500 டாங்கிகள் மற்றும் 24,000 கவசப் போர்த் தளவாடங்கள், 37,000-க்கும் மேற்பட்ட பீரங்கி அமைப்புகள், 781 விமானங்கள் மற்றும் 4,000-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை அந்த நாடு இழந்துள்ளதாகவும் உக்ரைன் தரப்பு மதிப்பிட்டுள்ளது.

டொனெட்ஸ்க் மாகாணம்
2025 ஆம் ஆண்டின் இறுதி வரையில், ரஷ்யப் படைகள் ஐந்து மாதங்களாகக் கைப்பற்றப் போராடி வந்த டொனெட்ஸ்க் மாகாணத்தில் உள்ள கிழக்கு உக்ரேனிய நகரங்களான போக்ரோவ்ஸ்க் மற்றும் மிர்னோஹிராட் ஆகியவற்றை இன்னும் கைப்பற்றவில்லை.
ரஷ்யா கைப்பற்றிவிட்டதாகக் கூறினாலும், தெற்கு சபோரிஜியா பிராந்தியத்தில் உள்ள ஹுல்யாய்போலின் 55 சதவீத பகுதியை மட்டுமே அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

ஆண்டின் கடைசி வாரத்தில், ரஷ்யா உக்ரைனின் நகரங்கள் மீது ஆயிரத்திற்கும் மேற்பட்ட ட்ரோன்களையும் 33 ஏவுகணைகளையும் ஏவித் தாக்கியது. ட்ரோன்களில் 86 சதவீதத்தையும், ஏவுகணைகளில் 30-ஐயும் இடைமறித்து அழித்ததாக உக்ரைனின் விமானப்படைத் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |