uk டிக்கெட் வைத்திருக்கும் அதிர்ஷ்டசாலி: 171 மில்லியன் பவுண்டுகள் ஜாக்பாட் வெற்றி!
uk டிக்கெட் வைத்திருப்பவருக்கு 171 மில்லியன் பவுண்டுகள் ஜாக்பாட்.
வெற்றி டிக்கெட் வைத்திருப்பவரை ஆதரவளிப்பதற்கும் அவர்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கும் தயாராக இருப்பதாக அறிவிப்பு.
பிரித்தானியாவில் நடைபெற்ற யூரோ மில்லியன் டிராவில் uk டிக்கெட் வைத்திருப்பவர் 171 மில்லியன் பவுண்டுகள் ஜாக்பாட் வெற்றியை கோர முன்வந்துள்ளார்.
பிரித்தானியாவில் தி நேஷனல் லாட்டரி அமைப்பால் நடத்தப்பட்ட லாட்டரி குலுக்கலில் uk டிக்கெட் வைத்திருக்கும் அதிர்ஷ்டசாலி ஒருவர் £171,815,297.80 பரிசை தட்டிச் சென்றுள்ளார்.
இது குறித்து வெள்ளியன்று கேம் லாட் கூறிய தகவலில், யூரோ மில்லியன் டிராவில் 171 மில்லியன் பவுண்டுகள் ஜாக்பாட்டை பிரித்தானிய டிக்கெட் வைத்திருப்பவர் உரிமை கோர முன்வந்துள்ளார்.
தி நேஷனல் லாட்டரியின் மூத்த வெற்றியாளர்களின் ஆலோசகர் கேம்லாட்டின் ஆண்டி கார்ட்டர், பிரித்தானியாவில் யூரோ மில்லியன் வீரர்களுக்கு என்ன ஒரு அற்புதமான ஆண்டு என தெரிவித்ததுடன், எப்போதும் இல்லாத மூன்றாவது பெரிய வெற்றிக்கான உரிமைகோரலைப் பெற்றதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் எனத் தெரிவித்தார்.
அத்துடன் வெற்றி டிக்கெட் வைத்திருப்பவரை ஆதரவளிப்பதற்கும் அவர்களின் உண்மையான வாழ்க்கையை மாற்றும் வெற்றியை அனுபவிக்க அவர்களுக்கு உதவுவதற்கும் நாங்கள் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் டிக்கெட் சரிபார்க்கப்பட்டு பணம் செலுத்தப்பட்டதும், வெற்றியாளர் பொதுவில் செல்வதா இல்லையா என்பதை முடிவு செய்வார் எனவும், இந்த ஆண்டு இங்கிலாந்தில் வென்ற ஆறாவது யூரோ மில்லியன் ஜாக்பாட் இதுவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு; பிரித்தானிய பொருளாதாரத்தை மேம்படுத்த குடியேற்ற விதிகளில் தளர்வு: பிரதமர் லிஸ் ட்ரஸ் யோசனை
சண்டே டைம்ஸ் பணக்காரர் பட்டியலின்படி, £100 மில்லியன் மதிப்புடைய பாடகர்களான ஹாரி ஸ்டைல்ஸ் மற்றும் மதிப்பிடப்பட்ட £150 மில்லியன் மதிப்புள்ள அடீல் ஆகியோரை விட தற்போது uk டிக்கெட் வைத்திருக்கும் அதிர்ஷ்டசாலி பெரிய பணக்காரராக மாறுகிறார்.