பிரித்தானியாவில் சிறார்களுக்கு உற்சாக பானங்கள் விற்க தடை விதிக்க திட்டம்
பிரித்தானியாவில் சிறார்களுக்கு உற்சாக பானங்கள் (energy drinks) விற்க தடை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் 16 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு உற்சாக பானங்கள் விற்பனை செய்ய தடைவிதிக்கும் புதிய சட்டத்தை பிரித்தானிய அரசு பரிந்துரைத்துள்ளது.
150 mg/L caffeine அளவுக்கு மேல் உள்ள பானங்கள் மட்டுமே இந்த தடைக்கு உட்படுகின்றன. Red Bull போன்ற பிரபல பானங்களும் இதில் அடங்கும்.
சாதாரண சோடா, தேநீர், காபி போன்ற பானங்கள் இதில் சேராது.
குழந்தைகளிடம் அதிகப்படியான Caffeine உட்கொள்ளும் பழக்கத்தை குறைக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
ஒரு உற்சாக பானத்தில் 2 காபி கப்புகளுக்கு மேல் Caffeine இருப்பதாகவும், இது தலைவலி, தூக்கமின்மை, கவனக்குறைவு, பற்கள் சேதம் மற்றும் உடல் எடை அதிகரிப்பு போன்ற பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் என பல ஆய்வுகள் கூறுகின்றன.
குறிப்பாக சமூக ரீதியாக பின்தங்கிய பகுதிகளில் உள்ள குழந்தைகள் அதிகமாக அபாதிக்கப்படுகிறார்கள்.
இந்த தடையை அமுல்படுத்தும் முன், அரசு 12 வார் ஆலோசனை காலத்தை அறிவித்துள்ளது. இதில் பெற்றோர், மருத்துவ நிபுணர்கள், வணிகர்கள் மற்றும் பிற பங்குதாரர்களிடமிருந்து கருத்துக்கள் பெறப்படும்.
இந்த முயற்சி இளம் தலைமுறையின் உடல்நலத்தை பாதுகாக்கும் முக்கியமான முன்னெடுப்பாக கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK Government proposed law, Red Bull, energy drinks ban in UK, UK ban energy drinks, Red Bull ban in UK, High caffeine drinks