பிரித்தானியாவுக்கு பயணிப்போருக்கு ஒரு பயனுள்ள செய்தி
2026ஆம் ஆண்டில் பிரித்தானியாவுக்கு பயணிப்போருக்கு ஒரு முக்கிய செய்தியை பிரித்தானிய அரசு வெளியிட்டுள்ளது.
இனி விசா ஸ்டிக்கர்களுக்கு பதில் eVisa
2026ஆம் ஆண்டில், விசா ஸ்டிக்கர்களுக்கு பதில் eVisa வழங்குவதற்கான நடவடிக்கைகளை பிரித்தானிய அரசு துவக்கியுள்ளது.

Credit Mirror.co.uk
பிரித்தானியாவின் விசா மற்றும் புலம்பெயர்தல் அமைப்பு (UK Visas and Immigration - UKVI), புலம்பெயர்தல் அமைப்பை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க முடிவு செய்துள்ளது.
அதாவது, மக்களின் அடையாளம் மற்றும் புலம்பெயர்தல் நிலையைக் காட்டும் காகித ஆவணங்களுக்கு பதிலாக இனி டிஜிட்டல் முறையிலான ஆவணம் ஒன்றே பயன்படுத்தப்பட உள்ளது. அது, eVisa என அழைக்கப்படுகிறது.
நேற்று, அதாவது, 2026ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 12ஆம் திகதி விசா பெற்ற பலருக்கும் eVisaவும் விசா ஸ்டிக்கரும் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, இது காகித வடிவிலான ஆவணங்களிலிருந்து டிஜிட்டல் மயமாக்கலுக்கு மாறும் காலகட்டம் ஆகும்.

Credit : Gov.uk
2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், விசா ஸ்டிக்கர்களை வழங்குவதை பிரித்தானியாவின் விசா மற்றும் புலம்பெயர்தல் அமைப்பு முழுமையாக நிறுத்திவிட உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |