மேலும் ஒரு புலம்பெயர்தல் விதியைக் கடுமையாக்க பிரித்தானிய அரசு முடிவு
பிரித்தானிய அரசு, மேலும் ஒரு புலம்பெயர்தல் விதியைக் கடுமையாக்க முடிவு செய்துள்ளது.
அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்
சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த திணறிவரும் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் அரசு, சட்டப்படியான புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு திட்டங்களை முன்வைத்துவருகிறது.
அவ்வகையில், பிரித்தானியாவில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளவர்கள் தங்கள் குடும்பத்தினரை பிரித்தானியாவுக்கு அழைத்துவருவது தொடர்பிலான விதிகள் கடுமையாக்கப்பட உள்ளதாக உள்துறைச் செயலரான Yvette Cooper தெரிவித்துள்ளார்.
அவ்வகையில், பிரித்தானியாவில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினர் பிரித்தானியா வர விரும்பும் நிலையில், அவர்கள் கடினமான ஆங்கில மொழித் தேர்வுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.
அத்துடன், பிரித்தானியா வரும் தங்கள் குடும்பத்தினருக்கான செலவுகளை எதிர்கொள்ளும் அளவுக்கு புகலிடக்கோரிக்கையாளர்களின் நிதி நிலைமை உள்ளதா என்பதும் கருத்தில் கொள்ளப்பட உள்ளது.
இதுபோக, மீண்டும் நாடாளுமன்றம் கூடும்போது, புகலிடக்கோரிக்கை நடைமுறையில் மாற்றங்கள் கொண்டுவரவும் உள்துறைச் செயலரான Yvette Cooper திட்டமிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |