பிரித்தானியாவில் மலிவான வாடகையில் தங்கும் அறை கிடைக்கும் டாப் 12 நகரங்கள்
பிரித்தானியாவில் மலிவான வாடகையில் தங்கும் அறை கிடைக்கும் முதல் 12 நகரங்களின் பட்டியில் வெளியாகியுள்ளது.
2024-ஆம் ஆண்டின் முடிவில் பிரித்தானியாவின் வாடகை சந்தை சற்று நிலையாக உள்ளதாக SpareRoom நிறுவனம் வெளியிட்டுள்ள Q4 வாடகை குறியீடு காட்டுகிறது.
கடந்த சில வருடங்களில் தங்குமிடங்களுக்கான வாடகை அதிகரித்துக்கொண்டே இருந்த நிலையில், தற்போதைய நிலைப்பாடு வாடகையாளர்களுக்கு நிம்மதி அளிக்கிறது.
2024-ஆம் ஆண்டில் அறை வாடகை சராசரியாக £738 இலிருந்து £774 ஆக உயர்ந்துள்ளது. அதாவது அதிகபட்சம் 1% மட்டுமே உயர்ந்துள்ளது. இந்த உயர்வு, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், மிகவும் குறைவானதாகும்.
மலிவான வாடகை நகரங்கள்:
பிரித்தானியாவின் மிகவும் மலிவான வாடகை நகரமாக Bootle (£447) விளங்குகிறது.
அதனைத் தொடர்ந்து Barnsley (£465) மற்றும் Bradford (£473) நகரங்கள் உள்ளன.
மலிவான 12 நகரங்கள் (சராசரி மாத வாடகை):
- Bootle - £447
- Barnsley - £465
- Bradford - £473
- Middlesbrough - £473
- Huddersfield - £474
- Burnley - £480
- Rotherham - £483
- Stockton-on-Tees - £484
- Grimsby - £486
- Hull - £488
- South Shields - £488
- Blackburn - £493
விலையுயர்ந்த வாடகை நகரங்கள்:
Twickenham (£928) மிக விலையுயர்ந்த வாடகை கொண்ட நகரமாக உள்ளது. அதனைத் தொடர்ந்து Kingston-upon-Thames (£920) மற்றும் Epsom (£855) நகரங்களும் அதிக வாடகையுடன் உள்ளன.
ஒரு பிளாட் அல்லது வீட்டில் ஒரு அறையை வாடகைக்கு எடுப்பது ஒரு தனிநபருக்கு வாடகை செலவுகளில் பணத்தை மிச்சப்படுத்துவதற்கான பொதுவான வழியாகும். இது குறிப்பாக வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் இளம் தொழில் வல்லுநர்களிடையே பிரபலமாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |