எச்சரிக்கையை மீறிய பிரித்தானிய சுற்றுலாப்பயணி துபாயில் கைது
மத்திய கிழக்கு நாடுகள் சிலவற்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்திவரும் நிலையில், தாக்குதல் தொடர்பிலான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுப்பது மற்றும் அவற்றை சமூக ஊடகங்களில் பகிர்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமீரக அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள்.
பிரித்தானிய சுற்றுலாப்பயணி கைது
இந்நிலையில், எச்சரிக்கையை மீறிய பிரித்தானிய சுற்றுலாப்பயணி ஒருவர் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.

லண்டனைச் சேர்ந்த அந்த 60 வயது நபர் வளைகுடா நாடுகளுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், ஈரானிலிருந்து வீசப்படும் ஏவுகணைகளை வீடியோ எடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Bur Dubai என்னுமிடத்திலுள்ள பொலிஸ் நிலையத்தில் அவர் வைக்கப்பட்டுள்ளதாக Detained in Dubai என்னும் அமைப்பு தெரிவித்துள்ளது.
அவரை தண்டிக்க அமீரகம் முடிவு செய்யுமானால், நாட்டின் சைபர் குற்றச் சட்டங்களின்படி, சட்டம் ஒழுங்கு அல்லது தேசிய ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படுத்திய குற்றத்துக்காக அவர் இரண்டு ஆண்டுகள் சிறை செல்லக்கூடும் அல்லது அவருக்கு 58,000 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |