அக்டோபர் 12 முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்படும் மாற்றம்: பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை
அக்டோபர் 12 முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 29 நாடுகளுக்குச் செல்லும் பயணிகள், குறிப்பாக பிரித்தானிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், புதிய Entry/Exit System (EES) முறைப்படி சோதனை செய்யப்பட உள்ளனர்.
இந்த விதிமுறை வரும் அக்டோபர் 12 முதல் அமுலுக்கு வருகிறது.
இதன்மூலம், பாஸ்ப்போர்ட்டில் கைப்பட முத்திரை பதிக்கும் தற்போதைய நடைமுறை முடிவுக்கு வருகிறது. அதற்கு பதிலாக, பயணிகள் ஷெங்கன் மண்டலத்திற்குள் நுழையும்போது கைரேகைகள் மற்றும் புகைப்படம் உள்ளிட்ட biometric தரவை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம்.
இது விமான நிலையங்கள், Eurostar, Eurotunnel மற்றும் Dover துறைமுகம் போன்ற இடங்களில் பிரத்யேகமான Kyasks அல்லது அதிகாரிகள் மூலம் சேகரிக்கப்படும்.
இந்த பதிவு மூன்று ஆண்டுகள் செல்லுபடியாகும். அனால் சில சந்தர்ப்பங்களில் புதுப்பிப்பு தேவைப்படும்.
இந்த விதிமுறை ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி கிரீஸ் உள்ளிட்ட பிரபல சுற்றுலா நாடுகளுக்கு பயணிக்கும் அனைவருக்கு பொருந்தும். ஆனால், அயர்லாந்து மற்றும் சைப்ரஸ் போன்ற நாடுகள் இதில் சேரவில்லை.
இந்த மாற்றம் ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கையாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
EU Entry Exit System 2025, EES biometric border checks, UK passport EU travel rules, Schengen zone border changes, October 12 EU travel update