பிரித்தானியா செல்லும் பயணிகளுக்கு., ETA கட்டண உயர்வு அறிவிப்பு
மின்னணு பயண அங்கீகாரத்தின் (ETA) கட்டணத்தை உயர்த்துவதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரித்தானிய அரசு, பயணிகளுக்கு தேவையான மின்னணு பயண அங்கீகாரத்தின் (Electronic Travel Authorisation) கட்டணத்தை 10 பவுண்டில் இருந்து 16 பவுண்டுகளாக உயர்த்துகிறது.
இந்த மாற்றம், புதிய திட்டம் தொடங்கிய ஒரு மாதத்துக்குள் அமுலுக்கு வருகிறது.
ETA என்பது என்ன?
ETA மூலம் பயணிகள் இரண்டு ஆண்டுகள் அல்லது அவர்களின் பாஸ்போர்ட் காலாவதியாகும் வரையிலான காலப்பகுதிக்குள், பிரித்தானியாவிற்கு பல முறை செல்ல அனுமதி பெறலாம்.
ஆனால் ஒவ்வொரு பயணமும் அதிகபட்சம் ஆறு மாதங்கள் வரை மட்டுமே இருக்க முடியும்.
ஜனவரி 8 முதல் சர்வதேச பயணிகள் ஒன்லைனில் ETA-க்கு விண்ணப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய பயணிகளுக்கு மார்ச் 5 முதல் விண்ணப்பம் திறக்கப்படும். ஏப்ரல் 2 முதல் ETA தேவைப்படும்.
குழந்தைகள் உட்பட அனைவரும் ETA பெற வேண்டும்.
விசா, வேலை, கல்வி அனுமதி உள்ளவர்கள் மற்றும் பிரிட்டிஷ்/ஐரிஷ் குடிமக்கள் இதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர்.
கட்டண உயர்வு
ETA கட்டண உயர்வுடன், பிற சார்பு கட்டணங்களும் அதிகரிக்கப்படும். உதாரணமாக, பிரிட்டிஷ் குடிமகனாக இயல்பாக்குதல் (naturalisation as a British citizen) கட்டணம் £1,605 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் ஆண்டுதோறும் £269 மில்லியன் வருமானத்தை உருவாக்கும் என்றும், இது, குடிவரவு மற்றும் எல்லை பாதுகாப்பு செலவுகளை வரிப்பணத்தின் மீது அதிகமாகச் சுமத்தாமல் பாதுகாக்க உதவும் என்றும் அரசு கருதுகிறது.
நாடாளுமன்றத்தில் இந்த விதிமுறைகள் விவாதிக்கப்படும், மேலும் ஒப்புதல் பெற்ற பின்பே நடைமுறைக்கு வரும் என அரசு அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK ETA fees hikes, Electronic Travel Authorisation