ரஷ்ய அமைச்சருக்கு போட்டியாக... பிரித்தானிய அமைச்சர் இந்தியாவிற்கு பயணம்!
பிரித்தானிய வெளியுறவு துறை அமைச்சர் லிஸ் டிரஸ் மற்றும் ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இருவரும் ஒரேநாளில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
பிரித்தானிய வெளியுறவு துறை அமைச்சர் லிஸ் டிரஸ் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் குறித்து விவாதித்து அதற்கு ராஜதந்திர முறையில் அழுத்தம் கொடுப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்தியாவிற்கு வரும் வியாழக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிரான நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில், இந்தியா ஐக்கியநாடுகள் சபையில் ரஷ்யாவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட வாக்கெடுப்பை புறக்கணித்தது, மேலும் ரஷ்யாவில் இருந்து சலுகை விலையில் எண்ணெய் கொள்முதல் செய்வது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை செய்துவருகிறது.
இந்தநிலையில், பிரித்தானிய வெளியுறவு துறை அமைச்சர் லிஸ் டிரஸ் மற்றும் ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இருவரும் ஒரேநாளில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவரது வெளியுறவு துறை அலுவலகம் வெளியிட்ட குறிப்பில், இந்த சுற்றுப்பயணம் மூலம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக ஜனநாயக நாடுகளின் கூட்டு ஒற்றுமையின் முக்கியத்துவம் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவது மற்றும் இந்தோ- பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் இருநாடுகளின் வேலைவாய்ப்பின் உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
மேலும் இந்த சுற்றுப்பயணம் மூலம் இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் 70 மில்லியன் பவுண்ட்கள் முதலீடு செய்வது தொடர்பாகவும் ஒப்பந்தம் உறுதிப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
இதையடுத்து, லிஸ் டிரஸ் வெளியிட்ட அறிக்கையில், இந்த சுற்றுப்பயணம் உக்ரைனில் ரஷ்யாவின் அத்துமீறிய தாக்குதல் தொடர்பான முக்கியமானதாக இருக்கும் மற்றும் பாதுகாப்பு, வர்த்தகம், மற்றும் இணைய பாதுகாப்பு ஆகியவற்றில் ஜனநாயக நாடுகளின் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை அடிப்படையாக கொண்டிருக்கும் என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறை வெளிட்ட செய்தி குறிப்பில், வியாழக்கிழமை ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் மற்றும் பிரித்தானிய வெளியுறவு துறை அமைச்சர் இருவரும் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர் மேலும் இவர்கள் இந்தியாவில் இருக்கும் போது சந்திப்பார்களா என்பது உடனடியாக தெரியவில்லை என தெரிவித்துள்ளது.
ஊழியர்களின் தலைமீது விழுந்த மேற்கூரை: உறைய வைக்கும் காணொளி!