நிதி நெருக்கடியில் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள்., ஏழை மாணவர்களுக்கு அதிக பாதிப்பு
பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன.
வெளிநாட்டு மாணவர் சேர்க்கை குறைவதால், பல்கலைக்கழகங்கள் “Survival Mode” நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
2025-26 கல்வியாண்டில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கை 10 சதவீதம் குறைந்துள்ளது. இதனால், 43 சதவீத பல்கலைக்கழகங்கள் பெரும் இழப்புடன் நிதியாண்டை முடிக்க வாய்ப்பு உள்ளது.
University of Nottingham 600 வேலைகளை குறைக்க திட்டமிட்டுள்ளது. University of Sheffield-ல் Chemistry துறையில் 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. London South Bank University-யில் பணிநீக்கத்திற்கு எதிராக ஊழியர்கள் வேலைநிறுத்தம் நடத்தினர்.

பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சி நிதியை 31 சதவீதம் குறைத்துள்ளன. இதனால் PhD மாணவர்கள் மற்றும் ஆரம்பகால ஆராய்ச்சியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
44 சதவீத பல்கலைக்கழகங்கள் பாடநெறிகளை குறைத்துள்ளன. குறிப்பாக Chemistry, History, English Literature, Modern Languages போன்ற துறைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால், ஏழை மாணவர்களுக்கு hardship funding மற்றும் outreach programmes குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் குறைந்த வருமானம் கொண்ட மாணவர்களுக்கு உயர்கல்வியை பெறுவது சிரமமாகும்.
பல்கலைக்கழகங்கள் இணைந்து செயல்பட (mergers & alliances) திட்டமிடுகின்றன. King’s College London, Cranfield University-யை இணைக்க முயற்சி செய்கிறது.
அரசு கட்டணங்களை பணவீக்கத்துடன் உயர்த்த அனுமதி அளித்தாலும், ஊதியச் செலவுகள், தேசிய காப்பீடு பங்களிப்பு, வெளிநாட்டு சேர்க்கை குறைவு ஆகியவை பல்கலைக்கழகங்களை கடுமையாக பாதிக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |