பாகிஸ்தான், வங்காளதேச மாணவர்களுக்கு நோ சொல்லும் யுகே பல்கலைக்கழகங்கள்
பிரித்தானிய பல்கலைக்கழகங்கள், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச மாணவர்களின் விண்ணப்பங்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
இதற்குக் காரணம், Home Office அறிமுகப்படுத்திய புதிய Basic Compliance Assessment விதிமுறைகள்.
புதிய விதிமுறைகளின்படி, பல்கலைக்கழகங்கள் அனுப்பும் மாணவர் விசா விண்ணப்பங்களில் 5 சதவீதத்திற்கும் மேல் நிராகரிப்பு இருக்கக் கூடாது. முன்பு இந்த வரம்பு 10 சதவீதமாக இருந்தது.
பாகிஸ்தான் மாணவர்களின் விசா நிராகரிப்பு விகிதம் 18 சதவீதமாகவும், வங்காளதேச மாணவர்களின் விகிதம் 22 சதவீதமாகவும் உள்ளது.
இதனால், பல்கலைக்கழகங்கள் தங்கள் ஸ்பான்சர் உரிமையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எந்தெந்த பல்கலைக்கழகங்கள் நிறுத்தியுள்ளன?
Chester பல்கலைக்கழகம், பாகிஸ்தான் மாணவர் சேர்க்கையை 2026 வரை நிறுத்தியுள்ளது.
University of Wolverhampton, East London, Coventry, Sunderland பல்கலைக்கழகங்கள், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச மாணவர்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
Hertfordshire பல்கலைக்கழகம் உள்துறை அலுவலகத்தின் உத்தரவின் பேரில் 2026 வரை இரு நாடுகளின் மாணவர்களை நிறுத்தியுள்ளது.
Oxford Brookes, London Metropolitan, BPP பல்கலைக்கழகங்கள் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் சேர்க்கையை நிறுத்தியுள்ளன.
ஏன் அதிக நிராகரிப்பு?
பிரித்தானிய உள்துறை அலுவலகம் அதிகமான விசா சோதனை மேற்கொள்கிறது.
மாணவர்/வேலை விசாவில் நுழைந்து புகலிடம் கோரும் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
சில கல்வி முகவர்கள் (agents) பலவீனமான ஆவணங்கள் கொண்ட மாணவர்களை அனுப்பியதால், நிராகரிப்பு விகிதம் உயர்ந்துள்ளது.
இந்த மாற்றம், ஆயிரக்கணக்கான உண்மையான மாணவர்களின் கனவுகளை பாதித்துள்ளது. பலர் டெபாசிட் பணத்தை இழந்துள்ளனர், சிலர் பயணத் திட்டங்களை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்கள், தங்கள் உரிமையை காப்பாற்றும் நோக்கில், இதுபோன்ற கடுமையான முடிவுகளை எடுக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK universities stop Pakistani Bangladeshi students 2025, UK visa refusal rate Pakistan Bangladesh students, Basic Compliance Assessment Home Office new rules, University of Chester Wolverhampton Hertfordshire bans, Oxford Brookes London Metropolitan BPP student intake pause, Pakistani Bangladeshi student visa rejection UK 2025, UK international student sponsor licence compliance, UK universities admissions freeze South Asian students, UK Home Office stricter student visa regulations, Impact on Pakistani Bangladeshi students UK education plans