கராச்சியில் உள்ள பிரித்தானியா விசா அலுவலக டிவியில் ஓடிய ஆபாச வீடியோ: மக்கள் அதிர்ச்சி
கராச்சியில் உள்ள பிரித்தானிய விசா அலுவலகத்தில் ஆபாச வீடியோ திரையிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய விசா அலுவலகம்
பாகிஸ்தானின் கராச்சியில் அமைந்துள்ள பிரித்தானிய விசா அலுவலகத்தில் உள்ள விளம்பர டிவி ஒன்றில் ஆபாச திரைப்படம் திரையிடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கள் பயணம் குறித்த நடைமுறைகள் மற்றும் பிற விவரங்களை அறிந்து கொள்வதற்காக பொதுமக்கள் கராச்சியில் உள்ள பிரித்தானிய விசா அலுவலகத்தில் வழக்கம் போல காத்திருந்துள்ளனர்.
The UK visa office in Karachi, operated by Gerry's, accidentally displays an inappropriate video on the large screen. pic.twitter.com/ExGNjcMht0
— Ahmer Khan ?? ✪ (@StellarTweeting) November 23, 2023
அப்போது அங்குள்ள விளம்பர டிவி ஒன்றில் 2 பெண்கள் ஒருவரை ஒருவர் முத்தம் கொடுப்பது போன்ற காட்சிகள் திடீரென ஓட தொடங்கியுள்ளது.
டிவியில் ஓடிய காட்சிகள் செல்ல செல்ல அங்கு இருந்தவர்களை முகம் சுழிக்க செய்யும் அளவிற்கு ஓடியுள்ளது.
இவ்வாறு சிறிது நேரம் அந்த வீடியோ காட்சிகள் டிவியில் ஓடிய நிலையில், விசா அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து டிவியை உடனடியாக அணைத்துள்ளனர்.
பொதுமக்கள் அதிர்ச்சி
இந்த சம்பவத்தை அங்கிருந்த அஹ்மர் கான் என்ற நபர் படம் பிடித்து ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் அதில், கராச்சியில் உள்ள uk விசா அலுவலகத்தில் உள்ள டிவியில் பொருத்தமற்ற ஆபாச வீடியோ ஓடுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் இருக்கும் பொது இடத்தில் இது போன்ற காட்சிகள் ஒளிப்பரப்பானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |