அஸ்மா அசாதின் பாஸ்ப்போர்ட்டை கிழிக்கவேண்டுமென பிரித்தானியாவிற்கு எச்சரிக்கை
தப்பியோடிய சிரிய ஜனாதிபதியின் மனைவி தொடர்பில் பிரித்தானியாவிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிரியாவின் தப்பியோடிய ஜனாதிபதி பஷார் அல் அசாதின் (Bashar al-Assad) மனைவி அஸ்மா அல் அசாதை (Asma al-Assad) பிரித்தானியாவில் வாழ அனுமதிக்கக்கூடாது என்று பிரித்தானிய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அஸ்மா, அவரது பாஸ்போர்ட்டை கிழித்தெறியவேண்டும் என்றும், அவர் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் பிரித்தானியாவிற்குள் ஊடுருவலாம் என்பதால், அவரை நிரந்தரமாக பிரித்தானியாவிலிருந்து விலக்கி வைக்கவேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அஸ்மா, தனது கணவருடன் கடந்த மாதம் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
அஸ்மா அல் அசாத் குடும்பத்தின் பின்னணி
பிரித்தானிய வம்சாவளியைச் சேர்ந்த அஸ்மா அல் அசாத், லண்டனின் வடமேற்கு பகுதியில் வளர்ந்தவர்.
தற்போதைய சூழலில், தான் பிரித்தானியாவிற்கு திரும்ப வேண்டும் என்று அஸ்மா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவருக்கு புற்றுநோய் சிகிச்சை தேவைப்படும் நிலையில், இதனைக் காணமாக வைத்து அவர் பிரித்தானியாவிற்குள் நுழைய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அசாத் குடும்பத்தின் மீது விதிக்கப்பட்ட தடை
சிரியாவில் அசாத் குடும்பத்தினரின் ஆட்சி காலத்திலான கொடூரங்களால், அஸ்மா 2012-ஆம் ஆண்டு பிரித்தானிய அரசால் பொருளாதார தடைகளுக்கு உட்படுத்தப்பட்டார். பிரித்தானியாவில் உள்ள அவரது சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.
இந்த தடைகள் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய (Brexit) பிறகும் தொடர்ந்து நடைமுறையில் உள்ளன.
"அசாத் குடும்பத்தின் பல மில்லியன் நேரடியான மற்றும் மறையான கொடூரங்களை ஏற்று அவரின் மனைவிக்கு பிரித்தானியாவில் வாழ அனுமதி வழங்குவது சரியல்ல." என்று முன்னாள் நீதியமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் கூறியுள்ளார்.
"அஸ்மா அசாத் பிரித்தானியாவில் வரவேற்கப்படமாட்டார்" என்று வெளியுறவுத்துறை செயலர் டேவிட் லாம்மி உறுதியாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |